கலைஞர் நூற்றாண்டு விழாவின் நேரடி ஒளிபரப்பைக் காணுங்கள்!
சென்னை: முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. கடந்த 3ம் தேதி நடைபெற இருந்த இந்த பொதுக்கூட்டம் ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கி 2024ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வரை ஓராண்டுக்கு இந்த விழாவை நடத்த வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.

இந்த காலங்களில் 'எங்கெங்கும் கலைஞர்' என்கிற கருத்தியல் அடிப்படையில் கருணாநிதிக்கு அரசு அனுமதியுடன் சிலைகளை அமைப்பது. பழைய கொடி கம்பங்களை புதுப்பித்து கொடியேற்றுவது, 70 வயதுக்கு மேற்பட்ட கழகத்தின் முன்னோடிகளுக்கு மரியாதை செய்து பொற்கிழி வழங்குவது போன்ற தீர்மானங்களை திமுக ஏற்கெனவே நிறைவேற்றியிருந்தது. மட்டுமல்லாது, மாணவர்கள், இளைஞர்களுக்கான போட்டிகள், திமுக குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை போன்றவற்றையும் வழங்கலாம் என்று கட்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், டிஜிட்டல் நூலகங்களை திறப்பது, என்றென்றும் கலைஞர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்தவும், கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டங்களை சரியான முறையில் முன்னெடுத்து செல்ல மாவட்ட நிர்வாகங்களுக்கு ஆலோசனை வழங்கிட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்பிக்களும், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் என முன்னாள் எம்பிக்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி நடைபெற இருந்த இந்த பொதுக்கூட்டம் இன்று மாலை 7 மணியளவில், வடசென்னையின் புளியந்தோப்பு பகுதியில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில், திராவிடர் கழககத்தின் தலைவர் கீ.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், கொ.நா.ம.தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் என கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications