Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

99வது பிறந்தநாள்.. கருணாநிதி சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.. அறிவாலயத்தில் கோலாகலம்

கருணாநிதி 99-வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்... மேலும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி திமுகவின் முதல் தலைவராக பொறுப்பேற்ற கருணாநிதி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். 2018 ஆகஸ்ட் 7 அன்று வயது மூப்பின் காரணமாக மறைந்தார்.

எதிர்ப்பெனும் நெருப்பாற்றில் ஆரம்பம் முதல் இறுதிவரை நீந்திக்கொண்டே இருந்தவர்தான் கருணாநிதி... இவரது அரசியல் வாழ்க்கையில் உயரங்களையும், மோசமான பள்ளங்களையும் மாறிமாறி பார்த்தவர்..

மாற்றங்கள்

மாற்றங்கள்

அவர் இருந்தவரை, தமிழக அரசியலில் ஒவ்வொரு நிகழ்வும், அசைவும், எழுச்சியும், எதிர்ப்பும் அவரை சுற்றி சுற்றியே வலம் வந்தன.. அதேபோல மத்திய அரசியலிலும், தமிழக முதல்வராக கருணாநிதி ஏற்படுத்திய மாற்றங்கள் எத்தனையோ.. அவை அனைத்துமே வரலாற்றின் சுவடுகளாக இன்று உள்ளன.. அந்த வகையில், தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராக மட்டுமின்றி, இந்தியத் திருநாடே வியந்து போற்றியவர் முக. கருணாநிதி..

கோலாகலம்

கோலாகலம்

இவரது 99-வது பிறந்த நாள் விழாவை, திமுகவினர் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, திமுகவில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.. மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு இன்று காலை முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்... இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

 முத்திரை பதித்தவர்

முத்திரை பதித்தவர்

தமிழர்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவர், தான் கால் பதித்த கலை, எழுத்து, அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்திலும் தனித்தன்மையுடன் முத்திரை பதித்தவர்; 80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கும், போராட்ட வாழ்க்கைக்கும் சொந்தமானவர். உலக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் திமுக என்ற இயக்கத்துக்கு அரை நூற்றாண்டு காலம் அசைக்க முடியாத தலைவராகத் திகழ்ந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

 சமூக நீதி

சமூக நீதி

தமிழக முதல்வராக 5 முறை ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை, எளிய மக்கள் கல்வி, அறிவியல், சமூக பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற பல சமூக நலத்திட்டங்களை திறம்பட செயல்படுத்தி, நாட்டின் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக, சமூக நீதி காத்து சமத்துவபுரங்களை அமைத்தவர். தமிழுக்கு செம்மொழி தகுதியைப் பெற்றுத் தந்தவர்; திருவள்ளுவருக்கு குமரி முனையில் சிலை அமைத்து பெருமை சேர்த்தவர். நாட்டின் விடுதலைக்கு தன் இன்னுயிரை ஈந்த தமிழகத்தின் தியாகத் தலைவர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்களுக்கு மணிமண்டபங்கள் அமைத்து, பிறந்த நாட்களை அரசு விழாவாகக் கொண்டாட வழிவகுத்தவர்.

 மாலை அணிவித்து மரியாதை

மாலை அணிவித்து மரியாதை

வாழ்நாளின் இறுதிவரை ஓய்வறியாமல் அயராது உழைத்த கருணாநிதி ஆற்றியுள்ள அரும்பணிகள், சாதனைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அவருக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அவரது பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்றும் அவரது உருவச்சிலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார்.

 வெங்கய்ய நாயுடு

வெங்கய்ய நாயுடு

அதன்படி, கடந்த மே 28-ம் தேதி, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவால் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினமான இன்று முதல்முறையாக அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு, இன்று காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார்.

 கோபாலபுரம்

கோபாலபுரம்

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக, காலை 7.45 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கருணாநிதியின் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து நுங்கம்பாக்கம் முரசொலி அலுவலகம் செல்கிறார். அதன்பின் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, காலை உணவை அங்கேயே அருந்துகிறார். இதைத்தொடர்ந்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவாலயம்

அறிவாலயம்

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயத்தை தொடர்ந்து முரசொலி அலுவலகத்திலும், கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்... இன்னும் சற்றுநேரத்தில், சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

ஆரூர்தாஸ்

ஆரூர்தாஸ்

முன்னதாக, திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை, தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்... எத்தனையோ முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1,000 படங்களுக்கு உரையாடல்களை எழுதியவர் ஆரூர்தாஸ் ஆவார்.. தன் ஊரான திருவாரூரில் பாதி பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என்று பெயர் வைத்துக் கொண்டவர்.. 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த அனுபவம் ஒரு சாதனையாகும். அதனாலேயே இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+