அட்றா சக்கை.. அள்ளித் தருது தமிழக அரசு! அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை.. 29ஆம் தேதியை மறக்காதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு தற்போது சுமார் ஒரு கோடியே 14 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. இந்த நிலையில் விடுபட்ட தகுதி உள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வரும் 29ஆம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இரண்டே மாதங்களில் அவர்களுக்கு உரிமைத் தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவராக தான் சந்தித்த முதல் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுகவின் வெற்றிக்கு தேர்தல் அறிக்கையே முக்கிய காரணம். கேஸ் சிலிண்டர் மானியம், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்போடு மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என பிரச்சாரத்துக்கு சென்ற திமுக தலைவர்கள் மகளிர் உரிமை தொகையை வைத்து பெண்களிடையே ஆதரவு திரட்டினர். தேர்தலில் அதற்கு ஆதரவும் கிடைத்தது. தொடர்ந்து ஆட்சி அமைத்த போதும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

Magalir Urimai Thogai Scheme Tamil Nadu mk stalin

அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை என்ற திட்டம் தகுதியுள்ள மகளிருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் சுமார் ஒன்றரை கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் அதற்கு பிறகு திருத்தம் செய்யப்பட்டு தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில் பலரும் தங்களுக்கு உரிமை தொகை வரவில்லை என கூறினர்.

மேலும் புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு பலர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் மகளிர் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது புதிதாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறப்படும் என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். வழக்கம்போல் ஆன்லைனில் விண்ணப்பிக்காமல் தற்போது நேரடியாகவே விண்ணப்பங்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் 29ஆம் தேதி மக்களிடம் முதல்வர் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. அப்போது புதிதாக மகளிர் உரிமை கேட்பவர்கள் விண்ணப்பங்களை வழங்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஜூன், ஜூலை மாதங்களில் விண்ணப்பங்களை பரிசீலித்து ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அளவிலான அதிகாரிகள் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை பெறுவதற்கும் அதனை பரிசீலிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வருவாய் துறை பணியாளர்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் அப்டேட் செய்து, ஆதார் வங்கி கணக்கு மற்றும் பிற தகுதிகளை சரிபார்த்து இறுதி அறிக்கையை ஜூலை மாதத்தில் தமிழக அரசுக்கு வழங்க இருக்கிறார்கள். தொடர்ந்து பட்டியல் இறுதி செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் உதவித்தொகை அவரவர் வங்கி கணக்குகளில் வழங்கப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+