கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. கிடைக்குமா? கிடைக்காதா? ஆபிஸை தேடி அலைய வேண்டாம்! ஆன்லைனிலேயே அப்டேட்!
சென்னை: தமிழக அரசு அறிமுகப்படுத்திய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் விண்ணப்பித்த இலட்சக்கணக்கான மக்களுக்கு இனி புதிய வசதி ஒன்று கிடைத்துள்ளது. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக காத்திருக்கும் பெண்கள் மத்தியில், இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்டம், தமிழகத்தின் முக்கிய மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. நகர்ப்புறம், கிராமப்புறம் என மாநிலம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்களின் இல்லங்களுக்கு அரசின் சேவைகளைக் கொண்டு செல்லும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்களில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், ஆதார் அட்டை திருத்தம், மேலும் மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு சேவைகளுக்காக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

உங்களுடன் ஸ்டாலின்
குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அதிகமாக மகளிர் உரிமைத்தொகை வேண்டிய அதிக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் மகளிர் உரிமைத் தொகை வேண்டி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமான தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை
அதே நேரத்தில் இவ்வளவு நாள், இந்த முகாம்களில் மனு அளித்த மக்கள், தங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? அல்லது பரிசீலனையில் உள்ளதா? என்பதை அறிய முடியாத நிலை இருந்தது. இதனால் பலர், தங்கள் விண்ணப்ப நிலையை அறிய அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போது, இந்த சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு புதிய ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், விண்ணப்பித்த மக்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தின் நிலையை அறிய
இதற்காக, முதலில், https://ungaludanstalin.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கே "விண்ணப்பத்தின் நிலையை அறிய" என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர், விண்ணப்பத்தின் Reference Number அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். தகவல்கள் சரியாக உள்ளிட்டவுடன், விண்ணப்பத்தின் தற்போதைய நிலை உடனடியாக திரையில் தெரியும்.
தமிழக அரசு
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலித்து தீர்வு காணப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளதால், மக்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை எப்போது வேண்டுமானாலும் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக காத்திருக்கும் பெண்களுக்கு இந்த வசதி பெரும் நிம்மதியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
இணையதளம்
எங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்று எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. உடனே ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் என்று பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட மனுக்கள், கோரிக்கைகள் அல்லது சான்றிதழ்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தாலோ அல்லது கருத்துக்கள், கோரிக்கைகள் இருந்தாலும் இந்த இணையதளம் மூலம் விண்ணப்பித்து உரிய தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications