சென்னையில் 48வது புத்தக கண்காட்சி.. கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் யாருக்கு? வெளியான பட்டியல்!
சென்னை: பபாசி சார்பில் சென்னை புத்தகக் காட்சியில் 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பட்டியலில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கலைஞர் பொற்கிழி விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பேராசிரியர் அருணன் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பபாசி சார்பில் 48வது சென்னை புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியின் துவக்க நிகழ்ச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை துணை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.
சென்னை புத்தக கண்காட்சி:
இந்த புத்தக கண்காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் 8:30 வரையும், வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 18 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறும் நிலையில், 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் வாங்கிச் செல்லும் அனைத்து நூல்களுக்கும் அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பபாசி:
பபாசியில் உறுப்பினர் அல்லாதவர்கள், விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது.
தமிழக அரசு பங்கேற்பு:
குறிப்பாக, தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள். மேலும், இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது.
சிறப்பு நிகழ்ச்சிகள்:
அதுமட்டுல்லாமல், உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான PENGUIN RANDOM HOUSE INDIA, AMERICAN CONSULATE, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON & SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது. நிறைவுநாள் நிகழ்வில் நீதியரசர் ஆர்.மகாதேவன் விழா நிறைவுரை நிகழ்த்துகிறார்.
கலைஞர் பொற்கிழி விருது:
இந்நிலையில், ஆண்டுதோறும் சென்னை பபாசி புத்தக கண்காட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பேராசிரியர் அருணன், நெல்லை ஜெயந்தா, சுரேஷ்குமார் இந்திரஜித், ஸ்ரீராம், கலைராணி, நிர்மால்யா ஆகியோருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு லட்சம் பரிசு:
மேலும் சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பு செம்மல் கணபதி விருதுக்கு கற்பகம் புத்தகாலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நூலகர், புத்தக விற்பனையாளர், சிறந்த பெண் எழுத்தாளர் உள்ளிட்டோருக்கும் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுபெறும் ஆறு பேருக்கு சான்றிதழ் உடன் தலா ஒரு லட்சம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
விஜயின் தவெகவிற்கு ‘செக்'.. சென்னையின் 16 தொகுதிகளில் வெல்ல சபரீசன் வியூகம்.. ரெடியான 5 லட்சம் பேர் -
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்












Click it and Unblock the Notifications