கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. நாளை முதல் உதவி மையம் செயல்படும்.. யாரெல்லாம் அணுகலாம் தெரியுமா?
சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக நாளை முதல் உதவி மையம் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு 2 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாமல் வெறும் அறிவிப்பாக இருப்பதாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக அரசை விமர்சித்திருந்தன.

பெண்களும் இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என காத்திருந்தார்கள். மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி செயல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் எல்லா பெண்களுக்கும் இந்த உரிமைத் தொகை வழங்கப்படவில்லை.
இதற்காக சில விதிகள் வைக்கப்பட்டன. அதாவது உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் வருமான வரி செலுத்தக் கூடாது, ஆண்டு வருமானம் ரூ 2.50 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது, அது போல் ஆண்டுக்கு 3600 யூனிட்கள் மின்கட்டணம் செலுத்தக் கூடாது. கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை வைத்திருக்கக் கூடாது.
குறிப்பாக அவர்கள் அரசு ஊழியர்களாக இருக்கவே கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதற்காக வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் கலைஞர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை கொடுத்திருந்தனர். அதன்படி 1.63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1.06 கோடி பேரே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி அவருடைய பிறந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு ஏடிஎம் கார்டும் வழங்கப்பட்டது. முதல்வருடன் அந்தந்த வங்கிகளின் உயரதிகாரிகளும் இருந்தனர். இந்த தொகை இனி மாதாமாதம் வரவு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டோர் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன் படி நாளை முதல் உதவி மையம் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நாளை முதல் உதவி மையம் செயல்படுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பயனாளிகள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
நிராகரிக்கப்பட 56.60 லட்சம் பேருக்கு நிராகரித்ததற்கான காரணங்கள் இன்று முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது எனவும் நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிப்பு, விண்ணப்பம் ஏற்கப்பட்டும் ரூ 1000 உதவித்தொகை கிடைக்காதவர்களும் இந்த உதவி மையத்தில் நாடி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications