Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"திரா*விடியா மூஞ்சி".. தண்ணியடி பெண்ணே.. கஸ்தூரி வீசிய வெடி.. திரண்ட திமுக.."ஒரு பெண்ணா இருந்துட்டு"

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல டைரக்டர் நவீன், கஸ்தூரிக்கு ட்வீட் போட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.. மற்றொருபக்கம் 2விதமான ட்வீட்களால் சோஷியல் மீடியாவே பரபரப்பாக காணப்படுகிறது.

கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன..

Kalaignar Urimaithogai and why did the Famous Director Naveen support DMK

ஆனால் இந்த உரிமை தொகையை யார் யார் பெறமுடியும் என்ற கட்டுப்பாடுகள்தான் மிகுந்த அதிருப்தியை உண்டுபண்ணி வருகிறது.. மொத்தம் 12 கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சிகள் இதுகுறித்த விமர்சனங்களை திமுக மீது வீசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான், பிரபல நடிகையும், சமூக ஆர்வலரும், துணிச்சல்வாதியுமான, கஸ்தூரி 2 நாட்களுக்கு முன்பு, ஒரு ட்வீட்டினை பதிவிட்டு, கமலுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஷர்மிளாக்கள்: "டக்குனு கார் வாங்கி குடுத்துட்டாரே கமல் ! Generous gesture. But எத்தனை எத்தனை ஷர்மிளாக்கள் இங்கு. எல்லோருக்கும் கார் வேண்டாம், மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகைக்கு வழியில்லை. தன் தோழமை கட்சி அரசுக்கு எடுத்து கூறுவாரா மய்யத்தலைவர்?" என்ற கோரிக்கையுடன் ட்வீட் பதிவிட்டிருந்தார்.

Kalaignar Urimaithogai and why did the Famous Director Naveen support DMK

அனைவருக்கும் அந்த திட்டம் பயன் அளிக்கும் வகையில் திமுகவுக்கு எடுத்து சொல்லுமாறு கமலிடம் கஸ்தூரி கேட்டிருந்தது"தகுதிவாய்ந்த" பெண்களையும் தாண்டி, ஒட்டுமொத்த பெண்களின் கோரிக்கையாகவும் கருதப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் ட்வீட்டில் ஒரு பழைய வீடியோவை பகிர்ந்திருந்தார்.. அதில் பெண்கள் சிலர் டாஸ்மாக்கில் நின்று மது வாங்கும் காட்சிகளை வெளியிட்டு தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று தண்ணியடி. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும், என்று குறிப்பிட்டு உள்ளார்.
திராவிடியா மூஞ்சிகள்: இதையடுத்து, 2 பெண்கள் டாஸ்மாக்கில் மது வாங்கும் இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. "உண்மையை சுட்டிக்காட்டிட்டா இந்த திரா-விடியா மூஞ்சிகளுக்கு ஒரே defence தான் - கேள்வி கேட்டவரை அசிங்கமா பேசுவது. இன்னும் தமிழ் நாட்டில் குடிக்காதவர்கள் உள்ளோம் என்பதை யோசிக்க கூட முடியாத, சுய ஒழுக்கமென்றால் என்னவென்றே அறியாத முழு நோயாளிகள்" என்றும் பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரி இப்படி சொன்னதுமே, திமுகவினர் திரண்டு வந்துவிட்டனர்.. தாறுமாறான கருத்தை பதிவு செய்து, கஸ்தூரியை வறுத்தெடுத்தும் வருகிறார்கள்.. அந்தவகையில், பிரபல இயக்குநரும், நடிகருமான நவீன் ஒரு ட்வீட் போட்டு கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kalaignar Urimaithogai and why did the Famous Director Naveen support DMK

''பணக்கார மேல்தட்டு பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா? அப்போதெல்லாம் கெடாத சமூகம் சாமான்ய பெண்கள் சரக்கடிக்கும்போதுதான் கெடுமா? மது மனிதனின் உடல்நலத்திற்கு கேடு. ஆதிக்க உணர்வு சமூகத்திற்கே கேடு. பெண்ணாக இருந்துகொண்டு திராவிடியா என்று சொல்வதை நிறுத்துங்கள்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பரபரப்பு: ஒருபக்கம் கஸ்தூரி வீடியோ, இன்னொரு பக்கம் நவீனின் இந்த ட்வீட் இரண்டுமே, இணையத்தில் காரசாரமாக ரவுண்டு அடித்து கொண்டிருக்கிறது.

விளக்கம்: நடிகை கஸ்தூரியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் சர்ச்சைகளும் எழுந்து வந்த நிலையில், இதுகுறித்து அவர் ஒரு விளக்கமளித்துள்ளார். அதில், தவறான பாதையில் போகும் சில பெண்களை பற்றியே பதிவு. அவர்களின் பணம் பற்றியே கூறியுள்ளேன். மதுக்கடையில் பெண்கள் நிற்கும் நிலையை கண்டிக்க மாட்டீர்கள். அது யாருக்கென்றாலும். பெண்கள் உரிமை பணம் ஆண்களின் தவறான செலவுகளுக்கு பலியாகக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.. எனினும், கஸ்தூரியை கடுமையாக சாடி வருகிறார்கள் திமுகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+