இந்த வாரமே மகளிர் உரிமைத்தொகை.. தீபாவளிக்காக பெண்களுக்கு முன்கூட்டியே பணம்.. அதிகாரிகள் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெரும்பாலும் இந்த வாரமே வரவு வைக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Kalaingar 1000 RS Housewives money will be deposited this week itself ahead of Deepavali

காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது தற்போது உள்ள பயனாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அவர்களின் பண வசதி உயர்ந்து இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும். அதேபோல் அவர்களின் வருமானம் கூடி இருக்கிறதா.. என்றும் சோதனை செய்யப்படும். அவர்கள் உயிரோடு உள்ளனரா என்பதும் மாதம் மாதம் சோதனை செய்யப்படும் . அவர்கள் புதிதாக வாகனம் வாங்கி உள்ளனரா என்பதும் சோதிக்கப்படும்.

இது எல்லாம் சோதிக்கப்பட்டு அதன்பின்பே மாதம் மாதம் பணம் போடப்படும். தேவையின்றி பண வசதி படைத்தவர்களுக்கு பணம் போடுவதை தடுப்பதற்காக இந்த சோதனை முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

பயனாளிகள் மேல்முறையீடு: அதோடு பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது இதுவரை பணம் கிடைக்காமல் விடுபட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய முடியும். அவர்களுக்கான கால் அவகாசம் முடிந்துவிட்டது என்றே முதலில் கருதப்பட்டது.

தீபாவளி தொகை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதமாக இருந்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 14ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பெண்களில் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. எல்லா மாதமும் 15ம் தேதி வைக்கப்படும். ஆனால் கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ம் தேதி வைக்கப்பட்டது.

தற்போது வரை இந்த திட்டத்திற்கு 1.064 கோடி பேர் இந்த திட்டத்தில் தேர்வாகி உள்ளனர். இதில் வங்கி கணக்கில் சிக்கல் உள்ள சிலருக்கு நேரடியாக மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான் இரண்டாம் மாத தொகை தற்போது மீண்டும் அனுப்பப்பட உள்ளது.

அதன்படி கடந்த மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் எப்போது மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 15ம் தேதி மீண்டும் இந்த தொகை வழங்கப்பட வேண்டும். எல்லா மாதம் 15ம் தேதி பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்னும் 13ம் நாட்களில் இந்த பணம் அனுப்பப்படும். ஆனால் இந்த முறை தீபாவளி 12ம் தேதி வருகிறது. இதை மனதில் வைத்து பெண்களின் தேவையை கருதி 9 - 10 தேதிகளில் பணம் போடப்படலாம் என்று கூறப்படுகிறது.

தீபாவளி தொகை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெரும்பாலும் இந்த வாரமே வரவு வைக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு 1.70 கோடி விண்ணப்பித்த நிலையில் கிட்டதட்ட 70 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய முடியும். இதற்கு முன் சில விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து அதில் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் நீங்கள் பின்வருமாறு மேல்முறையீடு செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+