Exclusive Rewind: காரிலேயே பிரச்சனைகளை பேசி தீர்த்துடுவாரு... கருணாநிதி பற்றி சிலாகித்த சண்முகநாதன்!
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்ட நிலையில், உயிருடன் இருந்தபோது 01.06.2020 அன்று ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார்.
பல நாட்கள் தயக்கம் காட்டிய அவர், நாம் மேற்கொண்ட நீண்ட முயற்சிக்கு பிறகு கலைஞரை பற்றிய நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் அவர் மறைந்துள்ள இந்தச் சூழலில் அந்தப் பதிவு குறித்த ஒரு மீள்பார்வையை இங்கே பார்க்கலாம். கீழ்காணும் வரிகள் சண்முகநாதனின் குரல் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர் கூறி அழைப்பார்
''தலைவரை பொறுத்தவரை எந்த ஒரு செயலும் மிகச்சரியாக இருக்க வேண்டும் என நினைப்பார். அவரை பார்ப்பதற்காக நேரம் கேட்ட விஐபிக்ககளின் லிஸ்டை முதல் நாள் இரவே டைப் அடித்து தலைவரிடம் கொண்டு போய் கொடுப்பேன். அதை படித்துப்பார்த்து யாரை சந்திக்க வேண்டும் என்பதை அவர் தான் முடிவுசெய்வார். மேலும், லிஸ்டில் உள்ள பெயர்களை டிக் அடித்து நேரமும் குறிப்பிட்டு கொடுப்பார். மற்றபடி தொண்டர்களை சந்திப்பது என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம். அதற்கு எப்போதும் தடையில்லை. தலைவர் வீட்டில் இருந்து புறப்படும் போது அவர் கண்களில் தென்படும் நிர்வாகிகளை பெயர் சொல்லி அழைத்து நலம் விசாரிப்பார்''.

சாலை வழிப் பயணம்
''வெளியூர் பயணங்கள் என்றால் சாலை மார்க்கமாக காரில் பயணிப்பதையே அதிகம் விரும்புவார். சில நேரங்களில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில், விமானம் டிக்கெட்களை கூட ரத்து செய்ய கூறிவிட்டு காரில் செல்வார். கலைஞருக்கு காரில் பேசிக்கொண்டே செல்வது மிகவும் பிடிக்கும். இதனால் பயணத்தின் போது அவர் பாட்டு கேட்பது கூட அரிது. கார் பயணத்திலேயே உட்கட்சி பிரச்சனைகளை பற்றி பேசி தீர்வு காண்பதுடன் அதற்கும் முற்றுப்புள்ளியும் வைத்துவிடுவார்''.

அழுதுவிட்டேன்
''எனக்கு 32 வயது இருக்கும் என நினைக்கிறேன், ஒரு முறை ரயிலில் செல்லும் போது தலைவர் என்னை திட்டிவிட்டார். இதற்காக நான் தனியாக சென்று அழுது கொண்டிருந்தேன். உடனடியாக அவன் அழுதுகொண்டிருப்பான் பாவம் அழைத்து வா எனக் கூறி அன்பில் (அன்பில் தர்மலிங்கம்) மாமாவை அனுப்பி வைத்தார். அன்பில் மாமா என்னை மாப்ள என்று தான் அழைப்பார். மனதில் எதையும் வைத்துக்கொண்டு தலைவர் திட்டவில்லை. அழுக்கூடாது வா மாப்ள என்று தலைவரிடம் அழைத்துச்சென்றார். என்னை பார்த்தவுடன், இதுக்கெல்லாம் அழுவியா என்று கேட்டு என் மீது அவர் வைத்துள்ள உரிமையை வெளிப்படுத்தினார்.''

விரால் மீன்
''தலைவருக்கு உடல்நிலை நலமாக இருந்தவரை, ஒரு காலத்தில் விரால் மீன் விரும்பி சாப்பிடுவார். மதியத்தில் கோழிக்கறியும், இரவு நேரத்தில் விரால் மீன் குழம்பும் பிரியப்பட்டு சாப்பிடுவார். செயல்மணி என்பவர் இருந்தார், நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். அவர் தான் விரால் மீன் வாங்கி வருவார். உடல்நிலை சரியில்லாமல் போனதில் இருந்து இதை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்''

கடிதங்கள் தொகுப்பு
''தலைவர் இப்போது இல்லை என்றாலும் கூட நாள் தவறாமல் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று வருகிறேன். அவர் எழுதிய 4,100 கடிதங்களை (அறிக்கைகள் இல்லாமல் கடிதங்கள் மட்டும்) தொகுத்து புத்தகமாக வெளியிடும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மொத்தம் 20 தொகுப்புகள் வருகின்றன. அதில் நான்கைந்து தொகுப்புகள் புரூஃப் பார்ப்பதற்காக தயாராகி விட்டன. அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில் கொரோனாவால் அது தடைபட்டுவிட்டது. தலைவர் பிறந்தநாளுக்கு அவர் எழுதிய கடிதங்களை புத்தகமாக வெளியிட முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை''.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications