கலாஷேத்ராவில் தீவிர போராட்டம்..பாலியல் தொல்லை..நடவடிக்கை எடுங்க முதல்வரே..மாணவிகள் கண்ணீர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்..நீதி கிடைக்கும் வரை விடப்போவதில்லை என்று கூறி கலாஷேத்ரா கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அரசுக்கும் கலாஷேத்ரா கலைக்கல்லூரி மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் கற்றுத்தரப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கலாஷேத்ராவை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி என கூறப்படும் ஒரு பெண், தனது பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்று பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர் எனவும் இதுபோன்று தூவும் நடக்கவில்லை எனவும் அந்த பெண் மனு அளித்திருந்தார்.

பாலியல் தொந்தரவு

பாலியல் தொந்தரவு

இந்த மனுவின் அடிப்படையில் அங்கு பாலியல் தொந்தரவு யாருக்கும் நடக்கவில்லை அடையாறு கலாஷேத்ராவை பெண் தெரிவித்த காரணத்தினால் தேசிய மகளிர் ஆணையம், விசாரிக்குமாறு அளிக்கப்பட்ட உத்தரவை வாபஸ் பெறப்பட்டது. ஆனால் நேற்று ரகசியமாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, அடையாறு கலாஷேத்ராவில் 3 மணி நேரமாக விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரியில் திடீர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என தேசிய மகளிர் ஆணைய குழு அறிக்கை அளித்தது.

மாணவிகள் கொந்தளிப்பு

மாணவிகள் கொந்தளிப்பு

பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் தொடர்ந்து புகாரளித்தும், சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டும், விசாரணை நடத்த வேண்டிய தேசிய மகளிர் ஆணையம் திடீரென வாபஸ் பெற்றது மாணவிகளிடையே பெரும் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதபட்சத்திலும், தேசிய மகளிர் ஆணையம் தரப்பிலும் முறையான விசாரணை மேற்கொள்ளாத நிலையிலும் கலாஷேத்ராவில் பயிலும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவிகளுக்கு உறுதி

மாணவிகளுக்கு உறுதி

இதையடுத்து தெற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் சக்கரவர்த்தி தலைமையிலான, 20க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். பாலியல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் காவல்துறையினர் முன்னிலையில் உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவிகள் போராட்டதை கைவிட்டனர். மேலும் விடுதி மாணவிகள் இரண்டு நாட்களில் கல்லூரி விடுதியை காலி செய்ய வேண்டும் என பிறபிக்கப்பட்ட உத்தரவும் திரும்ப பெறப்பட்டது.

 கல்லூரிக்கு விடுமுறை

கல்லூரிக்கு விடுமுறை

இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுவதாகக் கூறி, நேற்றைய தினம் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவிகள் கல்லூரியில் இருந்து வெளியேறாமல், நள்ளிரவு 2 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மாணவிகள் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அரசுக்கும் கலாஷேத்ரா கலைக்கல்லூரி மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரிக்க உத்தரவிட்டதை பள்ளி நிர்வாகம் திரும்பப் பெற்றது ஏன்? நீண்ட நாட்களாக நடைபெற்ற சம்பவத்தை மத்திய அரசு மூடி மறைப்பது ஏன் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+