Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ ஜப்பான் டோக்கியோ பயண நேரம் 9 மணி நேரம்! மீண்டும் நேரடி விமானம் விடுங்க! திமுக MP கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலிருந்து ஜப்பானுக்கு நேரடி விமானம் இயக்கக் கோரி, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பான கடிதம் வருமாறு;

''நான் ஏற்கனவே தங்களுக்கு 25.4.2023 அன்று தேதியிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளவாறு கோவிட் பெருந்தொற்று பரவி இருந்த காலத்தில் ரத்து செய்யப்பட்ட சென்னை-ஜப்பான் நேரடி விமான சேவையை மீண்டும் துவங்கிட வேண்டும் என்று தங்களை மீண்டும் வற்புறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.''

Kalanidhi Veerasamy has written to the Union Minister Jyotiraditya Scindia requesting direct flight from Chennai to Japan

''விமான மூலம் பயணம் செய்வது தற்காலத்தில் விரைவான வசதியான பயணத்துக்கு மட்டுமின்றி பாதுகாப்பான பயணமாகவும் கருதப்படுகிறது. உலகில் உள்ள மிகப்பெரிய நகரங்கள் எல்லாம் விமான சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு நகரத்தில் இருந்து, இன்னொரு நாட்டில் உள்ள நகரத்துக்கு விரைந்து செல்ல முடிகிறது.''

''சென்னை மாநகரம் இந்தியாவில் மூன்றாவது பெரிய நகரமாகவும் தென்னாட்டில் மிகப்பெரிய நகரமாகும் உள்ளது. வாரத்திற்கு 164 விமானங்கள் சென்னைக்கும் டோக்கியோவுக்கும் சென்று வந்து கொண்டிருந்தன. 10 விமான நிலைய சேவை நிறுவனங்கள் இவற்றை வழங்கி வந்தன. கோவிட் பெருந்தொற்று காலத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.''

''இவ்வாறு மீண்டும் விமான சேவைகள் துவங்கப்பட்ட பின் சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை மட்டும் துவங்கப்படவில்லை. சென்னை-டோக்கியோ நேரடி விமானத்தில் விமான பயணம் 9 மணி 15 நிமிடங்கள் ஆகும். ஆனால் தற்பொழுது சென்னையில் இருந்து டோக்கியோ நகரத்திற்கு இணைப்பு விமானம் மூலம் பயணம் செய்வதால் பயண நேரம் கூடுதலாகி வருகிறது.''

''தற்போது கோவிட் தொற்று குறைந்துள்ளதாலும் சென்னை-டோக்கியோ விமான சேவைக்கு அதிக தேவை இருப்பதால் மீண்டும் சென்னை-டோக்கியோ விமான சேவையை துவங்க வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.இவ்வாறு டாக்டர் கலாநிதி வீராசாமி கடிதத்தில் கூறியுள்ளார்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+