கலாநிதி வீராசாமி வடசென்னை திமுக வேட்பாளர்: ஆற்காடு வீராசாமியின் மகன்.. ‘பவர்’ காட்டுவாரா?
Recommended Video

சென்னை: வடசென்னை திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராசாமி.
திமுக மூத்தத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி (49). சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த இவர், தனது எம்.எஸ் படிப்பை ஸ்ரீ ராமசந்திரா பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்துள்ளார். ப்ளாஸ்டிக் சர்ஜரி பற்றிய சிறப்புப் படிப்பை லண்டனில் நிறைவு செய்தவர்.

வீ கேர் மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ப்ளாஸ்டிக் சர்ஜனாகவும் பணியாற்றிய கலாநிதி, அப்போலோ மருத்துவமனையிலும் ப்ளாஸ்டிக் சர்ஜனாகப் பணியாற்றி உள்ளார். திமுக மருத்துவ அணியில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வடசென்னை மக்களவைத் தொகுதிக்கான திமுக வேட்பாளராக களமிறக்கப்படுகிறார் கலாநிதி. இதுவரை பத்துமுறை திமுகவை சேர்ந்தவர்கள் அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
1952 முதல் இதுவரை.. லோக்சபா தேர்தல் தகவல் அனைத்தும் இங்கே
வட சென்னையை பொறுத்தவரை திமுகவின் வலுவான தொகுதி என்றே கருதப்படுகிறது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இத்தொகுதியில் அதிமுகவின் வெங்கடேஷ் பாபு, திமுக வேட்பாளர் கிரிராஜனை இரண்டாவது இடத்திற்கு தள்ளி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!











Click it and Unblock the Notifications