பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறைக்கு! புகாரை அனுப்பிய கள்ளக்குறிச்சி ஆட்சியர்!போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கும், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கும் இடையிலான விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தனது செல்போனில் இருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், தனது முகாம் இல்லத்திற்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் மாவட்ட ஆட்சியர் பத்மஜா தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக காவல்துறையோ அல்லது மாநில உள்துறையோ இதுவரை இந்த விவகாரத்தில் எந்தவித வெளிப்படையான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மாநில அரசு மற்றும் காவல்துறையை மட்டும் நம்பியிருக்காமல், மாவட்ட ஆட்சியர் பத்மஜா தற்போது நேரடியாக மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளார்.

Kallakurichi Collector Padmaja

குறிப்பாக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு (DoPT) கடிதம் மூலம் அவர் இந்தப் புகாரை அனுப்பியுள்ளார். இந்தத் துறை நேரடியாகப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் மிக முக்கியமான துறையாகும். மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த அமைப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளைக் கையாளும் அதிகாரம் கொண்டது.

பிரதமர் மோடியின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் துறை

தற்போது இந்தத் துறையின் இணையமைச்சராக டாக்டர் ஜிதேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான நிவேதிதா சுக்லா வர்மா இந்தத் துறையின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணிப் பாதுகாப்பு மற்றும் அவர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் முழு அதிகாரமும் இந்தத் துறைக்கே உள்ளது.

கடந்த காலங்களில், இதுபோன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரடியாக மத்திய அரசின் இந்தத் துறைக்குப் புகார் அளித்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நேரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, தற்போது ஆட்சியர் பத்மஜா அனுப்பியுள்ள கடிதத்தின் அடிப்படையில், மத்திய அரசிடம் இருந்து எந்த நேரத்திலும் அதிரடி உத்தரவுகள் வரலாம் என அரசு வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மறுப்பு

மறுபுறம், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். "ஆட்சியரின் இல்லத்தில் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்களும் உள்ளன. அப்படி இருக்கும்போது நான் எப்படி உள்ளே சென்றிருக்க முடியும்? நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க இரத்தப் பரிசோதனைக்குக் கூடத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சியான திமுக தனது பெயரையும், தவெக ஆட்சியையும் கெடுக்க சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் அதிமுக புகார்

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக மற்றும் அதிமுக ஆகிய எதிர்க்கட்சிகள் தமிழக அரசிடம் மனு அளித்துள்ளன. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சட்ட அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர், முறையான புகார் வந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகப் பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்த ஆட்சியர் பத்மஜா, நேற்று நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டார்.

மாநில அரசின் நடவடிக்கைக்காகக் காத்திருக்காமல், பிரதமர் மோடியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறைக்கு ஆட்சியர் பத்மஜா புகார் அனுப்பியிருப்பது, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+