சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டுன்னு டிரைவர் சீட்டில் உட்கார்ந்து.. ஸ்கூல் பஸ்சை ஓட்டிய கலெக்டர்.. வியந்து போன கள்ளக்குறிச்சி

Google Oneindia Tamil News

சென்னை: கள்ளக்குறிச்சியில் பள்ளி பேருந்தை தானே, ஓட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர்.

Recommended Video

    சட்டுன்னு டிரைவர் சீட்டில் உட்கார்ந்து.. ஸ்கூல் பஸ்சை ஓட்டிய கலெக்டர் - வீடியோ

    தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் வகுப்புகள் செயல்பட தொடங்கியுள்ளன.

    இத்தனை நாட்களாக பள்ளிகளில் வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே அவை சரியான நிலையில் உள்ளனவா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    சத்தீஸ்கரில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.. ஆனா அரசுக்கு 1000 கோடி இழப்புசத்தீஸ்கரில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.. ஆனா அரசுக்கு 1000 கோடி இழப்பு

    இருக்கைகள், ஜன்னல்கள்

    இருக்கைகள், ஜன்னல்கள்

    இந்த நிலையில் தனியார் பேருந்துகளில் உள்ள இருக்கைகள், ஜன்னல்கள், அவசரகால வழி உள்ளிட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறதா என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பஸ்சை ஓட்டிய கலெக்டர்

    பஸ்சை ஓட்டிய கலெக்டர்

    பிறகு அவரே தனியார் பள்ளி பேருந்தை இயக்கி பார்த்தார். பேருந்து முறையான நிலையில் உள்ளதா என்பது குறித்து இயக்கி பார்த்தால்தான் தெரியும் என்பதால் அவரே இதைச் செய்துள்ளார்.

    பாராட்டுக்கள்

    பாராட்டுக்கள்

    மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நடத்திய இந்த ஆய்வு மற்றும் அவரே பஸ்சை ஓட்டிப் பார்த்தது ஆகியவை, அங்கிருந்தோரால் பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    மோசம்

    மோசம்

    தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன் பள்ளியை சேர்ந்த மாணவி சுருதி கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி பள்ளி முடிந்து, பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, பேருந்தில் தரைத்தளத்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். அப்போது அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் மாணவி சுருதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்போது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    தமிழகத்தில் பள்ளிப் பேருந்துகள் நல்ல நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். ஏனெனில், பஸ் உள்ளே ஓட்டை உடைசல் இருந்தாலோ, பிரேக் விஷயங்களை சரி செய்யவில்லை என்றாலோ, அது பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றை தவிர்க்க அதிகாரிகள் உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.

    English summary
    District Collector PN Sridhar has inspected the school bus by by driving himself in Kallakurichi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X