அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி இல்லை.. சபாநாயகர் அப்பாவு
சென்னை: கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதிக்கப்படும் என்று கூறியும், எல்லாம் தெரிந்தும் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒருநாள் சட்டப்பேரவையில் பங்கேற்க அனுமதி இல்லை என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
.தமிழக சட்டசபை நேற்று காலை 10. 00 மணிக்கு கூடியது. இதற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை வகித்தார். சட்டசபை கூட்டம் தொடங்கியதும், முன்னாள் எம்எல்ஏக்களான நாங்குநேரி மாணிக்கராஜ், பொன்னேரி ரவிகுமார், வந்தவாசி தனராஜ், சேந்தமங்கலம் சின்னசாமி, சின்னசேலம் சிவராமன், ஆர்கேநகர் வேணுகோபால், பெர மனல்லுார் அன்பழகன், கோவை மேற்கு மலரவன் உள்ளிட்டோர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து நேற்று அவை மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக நேற்று தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது. இதில் அதிமுக மற்றும் இதர கட்சிகளின் எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்ததில் 48 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஆளும் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அதிமுக தெரிவித்து உள்ளது. அவை தொடங்கியதும் இந்த விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் விவாதம் நடத்த கோரி சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை கேள்வி நேரம் என்றும், கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் நடத்தப்படும் என்று கூறினார்.
ஆனால் அதிமுக மற்றும் பாஜக, பாமக எம்எல்ஏக்கள் கள்ளச்சாராய சம்பவம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று கூறி பதாகைகளை ஏந்தி தர்ணா செய்தனர். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு முதலில் கேள்வி நேரம் என்றும் கேள்வி நேரம் முடிந்த பின்னர் கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
எனினும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபை எதிர்க்கட்ச்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமாரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து இது குறித்து கூறிய அமைச்சர் துரைமுருகன், கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதிக்கப்படும் என்று கூறியும், எல்லாம் தெரிந்தும் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
சட்டசபை விதிகளுக்கு உட்பட்டு தான் எல்லாரும் செயல்பட முடியும். விதிகளை தெரிந்தும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எந்த பிரச்சினை இருந்தாலும் நேரமில்லாத நேரத்தில் தான் விவாதிக்க முடியும். வேறு வழியின்றி தான் அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று துரைமுருகன் தெரிவித்தார்.
இதையடுத்து சபாநாயகர் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரு நாள் சட்டசபையில் பங்கேற்க அனுமதி இல்லை என்று அறிவித்தார். விவாதம் நடத்த அனுமதியில்லை என்று ஒருபோதும் கூறவில்லை. கேள்வி நேரம் முடிந்த பின்னர் கள்ளக்குறிச்சி விஷ சாரயாம் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தப்படும் என்று தான் கூறினோம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் தான் வெளியேற்றப்பட்டனர் என்றார்.
தொடர்ந்து சபாநாயகர் கூறுகையில், "கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கவில்லை. சட்டப்பேரவை மாண்பை குலைக்கும் வகையில் நடந்துகொண்டதால் தான் எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டோர் பேசியது எதுவும் சட்டப்பேரவை குறிப்பில் இடம்பெறாது. விதிகளை மீறி நடந்துகொண்டதால் இன்று ஒருநாள் மட்டும் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அதிமுகவினர் பங்கேற்க முடியாது" என்றார். இதேபோல் பாஜக, பாமக எம்எல்ஏக்கள் சட்டசபை நடவடிக்கைகளைப் புறக்கணித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications