தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார்.. பெண் ஆட்சியரிடம் தலைமை செயலர், அமைச்சர்கள் அவசர ஆலோசனை
சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் வேதனையடையும் வகையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண் மாவட்ட ஆட்சியரிடம், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர்கள், அமைச்சர்கள் புகார் கூறிய மாவட்ட ஆட்சியரிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அவசர ஆலோசனை நடத்தியுள்னளர்.
தவெக ஆட்சியில் ஏராளமான சர்ச்சைகள் வட்டமடிக்க தொடங்கியுள்ளன. ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது புகார்கள் எழுந்து வருகிறது. தவெக நிர்வாகிகளே குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். அதிகாரிகள், காவல்துறையினர், மக்களை மிரட்டுகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் புகார் கூறியுள்ளனர். ஆனால் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

தவெக எம்எல்ஏ சர்ச்சை
தவெக நிர்வாகியும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏவுமாக இருப்பவர் அருள் விக்னேஷ். இவர் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்தது. தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அருள் விக்னேசுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு வலியுறுத்தினர்.
இந்த விவகாரத்தை அருள் விக்னேஷ் மறுத்தார். தான் அவ்வாறு மெசேஜ் அனுப்பவில்லை என கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருடன் சென்னையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தலைமை செயலாளர் சாய்குமார், கூடுதல் தலைமை செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அருள் விக்னேஷ் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அருள் விக்னேஷ் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது.
அதிகாரிகள் அமைச்சர் ஆலோசனை
இதையடுத்து பெண் மாவட்ட ஆட்சியரை சென்னைக்கு அழைத்து விசாரிக்க தலைமை செயலாளர், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சென்னையில் அவரிடம் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனடிப்படையில் அருள் விக்னேஷ் மீது கட்சி மற்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவத்தில் வரும் நாட்களில் நடவடிக்கை எதிர்பார்க்கலாம் என தலைமை செயலகம் மற்றும் தவெக தரப்பில் கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
