Kalyana Veedu Serial: சிங்கப்பூர் மாப்பிள்ளைன்னா கேள்வியே கேட்க வேணாம் போல இருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் கோபிக்கு கல்யாணம் ஸ்வேதாவுடன்தான்னு ஒரு வழியா முடிவாயிருச்சு.இவர் நினைவிலேயே சூர்யா இருந்தும், அது கூடவா மூன்று தங்கைகள் கொண்ட கோபிக்கு புரியாது?

ஒரு வேளை ஒரு பெண் குழந்தையுடன்,கணவன் தன்னை விட்டு ஓடிவிட, அந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து முன் உதாரணமாக கோபி தான் இருக்கலாம் என்று நினைத்து ஸ்வேதாவை திருமணம் செய்துக்க சம்மதித்து இருக்காரோ என்னவோ.

சூர்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் பேர்வழி என்று, சிங்கப்பூரில் கோபிக்கு தெரிஞ்ச ஒரு ஃபிராடு மாப்பிள்ளையை பார்க்கிறார். அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி அவன் சிங்கப்பூரிலே பொண்டாட்டி சம்பளத்தில் வாழ்ந்த விஷயம் கோபிக்கும், ஸ்வேதா குடும்பத்துக்கும் மட்டுமே தெரியும்.

நான்கு லட்சம்

நான்கு லட்சம்

சிங்கப்பூரில் நாலு லட்சம் ரூபாய் சம்பளமாம். ஆனால், வீட்டில் ஒண்ணுமே இல்லை என்று கேட்டால், பூர்வீக வீடு, இதை மாத்த வேணாம் அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன்னு சொல்றான். சரி ஒரு புது பொருட்கள் கூட வீட்டுக்குத் தேவையானது வாங்கி போடக்கூடாதான்னு ரோஜா கேட்க, எதுக்குங்க வீணா செலவு பண்றது எனக்கு பிடிக்காதுன்னு சொல்றான். பத்திரிகையில் போட்டோ போடறது. பேனர் வைக்கறது, அதிகம்பேரை கல்யாணத்துக்கு கூப்பிடறது எதுவுமே மாப்பிள்ளைக்கு பிடிக்காதாம். இப்போதாவது சந்தேகம் வர வேணாம்?

மாப்பிள்ளை தங்கம்

மாப்பிள்ளை தங்கம்

வீட்டுக்கு வந்த சூர்யாவின் அப்பா மாப்பிள்ளை வீட்டையும், அவரின் குணத்தையும் பற்றி புகழ்ந்து பேசி தள்ளறார்.நானும் இப்படியே இந்த பூர்வீக வீட்டில் வாழணும், எனக்கு பிறக்கும் பிள்ளைகளும் இப்படியே இந்த பூர்வீக வீட்டில் வாழனும்னு சொல்றதை சொல்லி சொல்லி புகழ்கிறார். அப்படியே வாழ்ந்து கொண்டு இருந்தால் வீடுதான் இடிந்து விழும். இதை ஆஹா ஓஹோவென்று புகழ்கிறார் சூர்யாவின் அப்பா

மாப்பிள்ளை பிடிக்கலையா

மாப்பிள்ளை பிடிக்கலையா

மூஞ்சை ஏன் இப்படி வச்சிருக்கே..மாப்பிள்ளை பிடிக்கலையான்னு கேட்கறா சூர்யாவின் தங்கச்சி ரோஜா. சூர்யா என் தலை எழுத்து... அவ்ளோதான். நான் என்ன சொல்றதுன்னு சொல்ல, எனக்கும் அவனைப் பார்த்தாலே பிடிக்கலை. பெரிய இந்த மாப்பிள்ளை பார்த்துட்டோம்னு சந்தோஷத்துல துள்ளி குதிக்காத குறையில் இருக்கார். என்ன பண்றதுன்னே தெரியலைன்னு ரோஜாவும் அக்காவுக்காக கண் கலங்கறா.

தூர தேசத்தில்

தூர தேசத்தில்

கண்ணுக்கு தெரியாத ஊரில், விசாரிக்க முடியாத தூர தேசத்தில்மாப்பிள்ளை வேலை பார்க்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான்னு நம்பி பொண்ணை குடுத்துட்டு இப்போது அவஸ்தைப் படுபவர்களும் ஏராளம். நாட்டு நடப்பை புரிஞ்சுகிட்டு, உங்களுக்கு அவன் உண்மையானவன் என்று ஊர்ஜிதப்படுத்தி நம்ப வைக்கும் விஷயங்கள் இருந்தால், உங்கள் பெண்ணை தாராளமாக கட்டிக் கொடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+