விண்வெளி ஆய்வில் சாதிக்கத் துடிக்கும் உதயகீர்த்திகா.. குவியும் உதவிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனி, அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த உதயகீர்த்திகாவுக்கு நாலாபுறமிருந்தும் உதவிகள் வந்து சேருவதால் அவர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

யார் இந்த உதயகீர்த்திகா.. சிறு வயதிலிருந்தே விண்வெளிக் கனவுடன் வளர்ந்து வந்த செல்லப் பிள்ளைதான் உதயகீர்த்திகா. இவரது கனவுக்கு நீரூற்றி வளர்த்தி மகளின் கனவுக்கு உரம்போட்டு வளர்த்தார் தந்தை தாமோதரன். தாமோதர ஒரு ஓவியர், கூடவே எழுத்தாளரும் கூட.

Kamal and others extend their help to Theni Udayakeerthika

தமிழ் வழியில் பிளஸ்டூ வரை படித்த உதயகீர்த்திகா 2012ம் ஆண்டு இஸ்ரோ நடத்திய விண்வெளி ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் தமிழக அளவில் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார். விண்வெளி ஆய்வு தொடர்பான இவரது ஆர்வத்தையும், ஞானத்தையும் பார்த் பலரும் இவரை தொடர்ந்து விண்வெளி ஆய்வு படிப்பில் படிக்க தூண்டுதலாக இருந்தனர். ஆனால் குடும்ப பொருளாதார சூழலால் இதற்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

மகளின் ஆர்வமும், லட்சியமும் தடைபடாமல் பார்க்க முடிவு செய்த தந்தை தாமோதரன், கடும் சிரமத்திற்கு மத்தியில் பலரிடமும் பணம் புரட்டி உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் விண்வெளியியல் படிப்பில் சேர்த்தார். 92.5 சதவீத மதிப்பெண்களுடன் தனது படிப்பை வெற்றிகரமாக இப்போது முடித்துள்ளார் உதயகீர்த்திகா.

Kamal and others extend their help to Theni Udayakeerthika

தற்போது போலந்து நாட்டில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் சர்வதேச விண்வெளி வீரர்களுடன் இணைந்து ஆய்வில் ஈடுபடும் அரிய வாய்ப்பு உதயகீர்த்திகாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து இந்த ஆய்வுக்குச் செல்லும் ஒரே மாணவி உதயகீர்த்திகாதான்.

இப்போது இந்த ஆய்வுப் படிப்புக்காக அவருக்கு மிகப் பெரிய அளவில் நிதியுதவி தேவைப்படுகிறது. பலரும் மனமுவந்து உதவிகளை குவித்து வருகிறார்கள். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நேற்று உதயகீர்த்திகாவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பேசினார். இதேபோல மேலும் பலரும் உதயகீர்த்திகாவுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

Kamal and others extend their help to Theni Udayakeerthika

உதயகீர்த்திகாவின் ஆசை என்ன தெரியுமா.. சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா போல சாதனை படைக்க வேண்டும் என்பதுதான். கீர்த்திகாவின் கனவு நனவாக அத்தனை பேரும் ஆசிர்வதியுங்கள்.. உங்களது உதவிகளையும் அளித்து அவரது கனவு நனவாக உதவலாம்.

உதயகீர்த்திகாவின் தந்தை தாமோதரன் தொடர்பு எண்: 9626850509

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+