பாஜக தலைவர் எல். முருகன், குஷ்புவுக்கு எதிராக கமல் களம் இறக்கிய வேட்பாளர்கள் யார் தெரியுமா
ஆயிரம் விளக்கு, தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முக்கியமான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார்.
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். முக்கியமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவுக்கு எதிராகவும், தாராபுரம் தொகுதியில் பாஜக தலைவர் எல். முருகனுக்கு எதிராகவும் வெயிட்டான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளாராம் கமல்ஹாசன்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் தனி அணி அமைந்துள்ளது. சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் ஐஜேகே 40 தொகுதிகளிலும், சமக 37 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் மநீம தலைவர் கமல்ஹாசன். அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிடுகின்றனர்.
இன்றைய தினம் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். முக்கியமாக இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் குஷ்புவிற்கும், பாஜக தலைவர் எல். முருகனுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தப்போகின்றனர்.
- ஆயிரம் விளக்கு - கே.எம்.சரீப்
- ராயபுரம் - குணசேகரன்
- தொண்டமுத்தூர் - ஷாஜகான்
- உடுமலைப்பேட்டை- ஸ்ரீநிதி
- திருவாரூர்- கபில் அரசன்
- பவானிசாகர் - கார்த்திக் குமார்
- செய்யூர் - அன்பு தமிழ்சேகரன்
- வந்தவாசி - சுரேஷ்
- தாராபுரம் - சார்லி
- கரூர் - மோகன்ராஜ்
- வானூர்- சந்தோஷ்குமார்
- பாபநாசம் - சாந்தா
- ஒரத்தநாடு - ரங்கசாமி
- மன்னார்குடி - அன்பானந்தம்
- மதுராந்தகம் - தினேஷ்
- கீழ்பெண்ணாத்தூர்- சுகானந்தம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் கே.எம்.சரீப் போட்டியிட உள்ளார். அந்த தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்புவும், திமுக சார்பில் எழிலனும் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் மநீம சார்பில் வேட்பாளராக சார்லி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில்தான் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரின் வெற்றிக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தப்போகின்றனர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள்.












Click it and Unblock the Notifications