15 கேட்ட கமலுக்கு 3-ஆ?" கூட்டணி கட்சிகளுக்கு "வெட்டு".. 170 இடங்களில் திமுக போட்டி! கசிந்தது லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகிவிட்டன.. ஆளுங்கட்சியான திமுக தனது வெற்றி கூட்டணியை தக்கவைத்துக் கொள்வதோடு, புதிய கட்சிகளையும் இணைத்து பலமான கூட்டணியை உருவாக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. இதன் ஒரு பகுதியாக, திமுக இன்று முதல் தனது கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது..
கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்துவதற்காக திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் ஒரு வலிமையான குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்தக் குழுவில் திமுகவின் முக்கிய தலைவர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு, கே.என். நேரு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்..

தேர்தல் பேச்சுவார்த்தை குழு
இந்தத் தேர்தல் களத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுகவின் பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட ஆலோசனையை நடத்துகிறது.. முன்னதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக மதிமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடனும் தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது..
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்தக் கூட்டணியில் ஒற்றுமையும் பொதுவான நோக்கமுமே மிக முக்கியமானது என்று வலியுறுத்தியிருந்தார்..
மநீம தொகுதிகள்
எனினும், கமல் கேட்கும் எண்ணிக்கையை விட, திமுக தான் தோல்வியடைந்த தொகுதிகளில் சிலவற்றை மட்டுமே ஒதுக்க வாய்ப்புள்ளது.. ஏற்கனவே உள்ள கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளைக் குறைத்து மநீம-விற்கு வழங்க திமுக தலைமை ஆலோசித்து வருகிறது.. எனவே, இரு தரப்பிற்கும் பொதுவான ஒரு உடன்பாடு எட்டப்பட்ட பிறகே கமல் கேட்கும் தொகுதிகள் கிடைக்குமா என்பது உறுதியாகும்..
புதிய கட்சிகளின் வரவு காரணமாக, பழைய கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கையில் சில மாற்றங்களை செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளது..
கடந்த 2021 தேர்தலை விட மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை குறைத்து ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. இவ்வாறு குறைக்கப்படும் தொகுதிகளைப் புதிய வரவான தேமுதிக மற்றும் மக்கள் நீதி மய்யத்திற்குப் பிரித்து வழங்கத் தலைமை ஆலோசித்து வருகிறது..
கமல் கேட்ட 15 சீட்
குறிப்பாக, கடந்த தேர்தலில் 174 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, தான் தோல்வியடைந்த சில தொகுதிகளை இந்தக் கட்சிகளுக்கு வழங்க முன்வந்துள்ளது..
அதேவேளையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த முறையைவிட ஒரு தொகுதி கூடுதலாக வழங்கி மொத்தம் 7 தொகுதிகளை ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையைப் போலவே 25 தொகுதிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளது..
மற்ற சிறிய கட்சிகள் கூட்டணியில் இணையும் பட்சத்தில், அவர்கள் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..
தொகுதிப் பங்கீடு குறித்த இந்த ஆரம்பகட்ட நகர்வுகள் கூட்டணிக்குள் விவாதங்களை ஏற்படுத்தினாலும், தேர்தலுக்கு முன்பே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருக்கிறது.. இன்று என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி! -
OPS: விருப்ப மனு கொடுத்தும் சீட் கிடைக்கலையே.. திடீரென அண்ணா அறிவாலயம் வந்த ஓபிஎஸ் மகன்! -
4 மேயர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் மெகா ட்விஸ்ட்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்











Click it and Unblock the Notifications