நல்லா டீ போடுங்க.. உங்களை எங்கேயோ கொண்டு போய்டும்.. சிபியிடம் அரசியல் பேசிய கமல்ஹாசன்!
சென்னை: டீ நல்லா போடுங்கள் , உங்களை எங்கேயோ கொண்டு போய்விடும் என பிக்பாஸ் சிபியிடம் கமல்ஹாசன் அரசியல் பேசிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 கடந்த வாரம் தொடங்கியது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் தோன்றி போட்டியாளர்களுடன் பேசுவார். வாரத்தில் 5 நாட்களும் நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்து பேசுவார்.
அறிவுறுத்த வேண்டிய நேரத்தில் அறிவுறுத்துவார், குட்ட வேண்டிய நேரத்தில் குட்டுவார். இதனால் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் எபிசோடை நிறைய பேர் பார்ப்பார்கள்.

ஆன்லைன் கிளாஸ்
அந்த வகையில் நேற்றைய தினம் இந்த சீசனின் முதல் முறையாக கமல்ஹாசன் வந்தார். அப்போது அவர் நான் இங்கிருந்து உங்களை பார்த்தால் ஆன்லைன் கிளாஸ் பசங்க மாதிரியும் நான் வாத்தியார் மாதிரியும் தெரிகிறது. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் நிறைய கற்றுக் கொள்வது போல் நானும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்.

5 ஆண்டுகள் ஆன்லைன் கிளாஸ்
என்னுடைய ஆன்லைன் கிளாஸ் 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. என்னை பொருத்தவரை கற்பதற்கு நிறைய இருக்கிறது. வீட்டை சுற்றி பார்க்கும் போது வீடெல்லாம் ஜம்முன்னுதான் இருக்கு . ஆனால் ஜிம்மில்லன்னு ஏற்கெனவே சொன்னேன். அம்மிக்கல்லையெல்லாம் எடுத்து நிரூப் உடற்பயிற்சி செய்றாரு.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் நிரூப்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னு நிரூபித்த நிரூப்புக்கு வாழ்த்துக்கள். கேஸ் மூலமாகவும் பேச முடியும்னு நிரூபிச்ச பிரியங்காவுக்கு வாழ்த்துகள். டீ போடுறது நல்ல கலை சிபி. டீ நல்லா போடுங்க.. அது உங்களை எங்கேயோ கொண்டு போய் சேர்த்துடும்னு கமல்ஹாசன் சொன்னார். அப்போது அரங்கமே அதிர்ந்தது.

சைக்கிள் கேப்பில் அரசியல்
சைக்கிள் கேப்பில் அரசியலை கமல்ஹாசன் புகுத்திய நிலையில் பிக்பாஸ் அரங்கம் மட்டுமல்ல வீடுகளிலும் கரகோஷம் ஒலித்தது. பிக்பாஸ் ரசிகர்களும் ஆண்டவரே நிமிஷத்திற்கு நிமிஷம் அரசியல் பேசுகிறீர்கள் என்றனர். அது போல் இந்த வீட்டுக்குள் துப்பாக்கி சப்தம் கேட்க காரணமாக இருந்தது அபிஷேக்தான். நாட்டுக்குள் கேக்கும் பாத்திருக்கோம். நாமெல்லாம் தூங்கிட்டு இருந்தோம்னா எங்கே வேணாலும் துப்பாக்கிச் சூடு கேட்கும் என இதிலும் ஒரு வித அரசியலை கமல் பேசினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications