கமலோட சொத்து மதிப்பு.. ரூ. 176 கோடியாம்.. ஆனால் கடன் எவ்வளவு தெரியுமா?
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. சரத்குமார் மற்றும் பாரிவேந்தருடன் இணைந்து அமைத்துள்ள கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக கமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக எதிர்த்து போட்டியிடும் கமல், நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் கமல் வெளியிட்டுள்ள தனது சொத்து விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. நேற்று வரை 980 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் கமல் தான் பணக்கார வேட்பாளர்.

கமல் சொத்து மதிப்பு
கமல் பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.131.8 கோடி. அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.45 கோடி. தனக்கு மனைவி மற்றும் தன்னை சார்ந்திருப்பவர்கள் யாரும் கிடையாது என கமல் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் கமல் முதலிடத்தில் உள்ளார்.

முழு சொத்து விபரங்கள்
2019 -20 வருமான வரி தாக்கலின் படி தனது ஆண்டு வருமானம் ரூ.22.1 கோடி என கமல் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். கமல் வெளியிட்டுள்ள சொத்து விபரங்களின்படி வங்கி கணக்கில் ரூ.2.43 கோடி உள்ளது. மியூச்சுவல்பண்ட்சில் ரூ.26.1 லட்சமும், இன்சூரன்ஸ் ரூ.2.39 கோடி, தனிநபர் கடன் ரூ.36.24 கோடி, பிஎம்டபிள்யூ கார் உள்ளிட்ட வாகன மதிப்பு ரூ.3.69 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

சொந்தமாக விவசாய நிலம்
தனது பெயரில் ரூ.17.79 கோடி மதிப்பிலான 35.59 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக கமல் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் தனக்கு சொந்தமான கமர்சியல் கட்டிட மதிப்பு ரூ.92.05 கோடி, ரூ.19.5 கோடி மதிப்பில் 2 வீடுகள் உள்ளது. லண்டனில் உள்ள ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கமலை நெருங்கும் துணை தலைவர்
பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் கமலை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் உள்ளார். தன் பெயரிலும், தனது மனைவி பெயரிலும் சேர்த்து ரூ.160 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் பெயரில் மட்டும் ரூ.18 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஓட்டு வங்கி எவ்வளவு
2018 ல் கமல் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கினார். 2019 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக அக்கட்சி போட்டியிட்டது. இதில் 3.75 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமலின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 154 இடங்களில் போட்டியிடுகின்றனர்.

கமல் மீதான வழக்குகள்
கமல் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின்படி, தனது பெயரில் 3 வழக்குகள் உள்ளதாகவும், அதில் ஒன்றில் தான் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications