ரஜினியுடன் சேருவது நல்லதா? வொர்க் அவுட் ஆகுமா? மநீம நிர்வாகிகளுடன் கமல் தீவிர ஆலோசனை!
நடிகர் ரஜினிகாந்துடன் அரசியலில் இணைந்து ஈடுபடுவது பயன் தருமா, எதிர்காலத்தில் உதவுமா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு இருக்கிறார்.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்துடன் அரசியலில் இணைந்து ஈடுபடுவது பயன் தருமா, எதிர்காலத்தில் உதவுமா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டு இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இவர்களும் இணைய போகிறார்களா? அரசியலில் கூட்டணி வைக்க போகிறார்களா என்பதுதான் இப்போது தமிழக அரசியலில் மிக முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
ரஜினியுடன் தேவைப்பட்டால் இணைவேன் என்று நேற்று கமல்ஹாசன் கூறினார். நடிகர் ரஜினியும் வாய்ப்பு இருந்தால் நாங்கள் இணைவோம் என்று கூறினார். இதுதான் இந்த அரசியல் திருப்பத்திற்கு காரணம்.

அரசியல் திருப்பம்
அதேபோல் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்தார். அவசியம் ஏற்பட்டால் கூட்டணி வைப்போம் என்று கூறினார். இந்த நிலையில் இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று கட்சியினருடன் ஆலோசனை செய்தார். சென்னையில் தற்போது அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையில் ஆலோசனை
கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் கருத்து கேட்டார்.

வேறு என்ன கேட்டார்
ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ரஜினியுடன் இணைந்து அரசியலில் செயலாற்றுவது குறித்தும் கமல் ஆலோசனை செய்துள்ளார். ரஜினிகாந்துடன் அரசியலில் இணைந்து ஈடுபடுவது பயன் தருமா, எதிர்காலத்தில் உதவுமா என்று கமல்ஹாசன் கேட்டுள்ளார்.

விளக்கம்
அதேபோல் 2021 சட்டசபை தேர்தலில் கூட்டணி வைக்கலாமா? அப்படி வைத்தால் திராவிட கட்சிகளை வெல்ல முடியுமா, தொண்டர்கள் ஆதரவு தொடருமா, ரசிக சண்டை நீடிக்குமா ? என்றும் கமல்ஹாசன் கேட்டுள்ளார். இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவியுங்கள் என்று கமல்ஹாசன் கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுள்ளார்.

மீட்டிங் வாய்ப்புள்ளது
இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தை விரைவில் கமல்ஹாசன் சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கமல்ஹாசன் ரஜினி இருவரும் நேரில் இது தொடர்பாக ஆலோசிப்பார்கள். இந்த இணைப்பின் வாய்ப்புகளை, பயன்களை, சிக்கல்களை பேசுவார்கள் என்று கூறப்படுகிறது .
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications