இதுக்கு ஓட்டுப் போடுங்க.. சரியா.. இதுக்கு.. சைகை காட்டி வாக்கு சேகரித்த கமல்!
சென்னை: டார்ச்லைட் சின்னத்தை காட்டி இதுக்கு ஓட்டு போடுங்கள் என சைகை மூலம் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த மவுரியாவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது காசிமேட்டில் கமல்ஹாசன் பேசுகையில் இது வேறு விதமான குடும்ப அரசியல். இதுதான் குடும்பம். இதுதான் அரசியல்.
இந்த அரசியல்தான் நடந்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அதற்கு காரணம் நீங்களும் நானும் தான். நான் தாமதமாக அரசியல் வந்தேன். நீங்கள் அசட்டையாக இருந்துவிட்டீர்கள்.உங்கள் ஏழ்மையை காரணம் காட்டி, உங்கள் குடிசைகளை காரணம் காட்டி கையில் காசை வைத்து அழுத்துவார்கள்.

திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்
அதான் கொடுக்கிறார்களே, வாங்கிக் கொள்வோம் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை 5 வருடத்து வாழ்க்கை. அதன்பிறகு உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். அவர்கள் கொடுக்கும் பணம் தாத்தா, பாட்டி சொத்தில் இருந்து பிரித்து கொடுக்கவில்லை. உங்கள் பணத்துல அவர்கள் நிறைய எடுத்துக் கொண்டு உங்களுக்கு சில்லறைகளை கொடுக்கிறார்கள்.

கேள்வி
நல்ல அரசை நீங்கள் தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் கொடுக்கும் பணத்தைவிட அதிக பணம் உங்களுக்கு கிடைக்கும். உழைப்பில்லாமல் வாழ்க்கையில்லை. ஏனென்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. இது நாம் கேட்டு பழகிய பாடல், ஆனால் பழக மறந்துவிட்டோம்.

தேடி வரும் கட்சி
மக்களையும் மறந்தார்கள், தலைவர்களையும் மறந்தார்கள். இவர்களை அப்புறப்படுத்துங்கள். இந்த சின்னம் உங்களை தேடி வரும். எனக்கு எவ்வளவு கோபம் இருந்தால் உங்களை போல் நானும் நடுத்தெருவில் நிற்கிறேன். மவுரியா இந்த இடத்தை மாற்றி காட்டுவார்கள். அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறிய கமல்ஹாசன், மவுரியாவை பேசுமாறு கூறினார்.

மவுரியா
அப்போது மவுரியா கையில் இருந்த டார்ச்லைட்டை கமல்ஹாசன் பெற்றுக் கொண்டு தன் கையில் இருந்த மைக்கை அவரிடம் கொடுத்தார். மவுரியா பேசிக் கொண்டிருந்த போது அங்கு நிற்போரை பார்த்து கமல் கையசைப்பதும் சிரிப்பதுமாக இருந்தார். பின்னர் டார்ச்லைட்டை மறந்துவிடாதீர்கள் என சைகை மூலம் வாக்கு சேகரித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications