Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமலுக்கு வாய்ப்பூட்டு.. கன்னடம் குறித்து பேசவே கூடாது! அதிரடியாக உத்தரவிட்ட நீதிமன்றம்! பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவரது படம் கர்நாடகாவில் வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கமலஹாசன் கன்னட மொழி, கலாச்சாரம், நிலம், இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது பெங்களூரு நீதிமன்றம்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. குறிப்பாக நடிகர் கமலஹாசனின் சிம்புவும் முதன்முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சிம்பு ஏற்கனவே மணிரத்தினத்தின் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கமல், சிம்பு மட்டுமல்லாது, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். ஏஆர் ரகுமான் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

kamal haasan Thug Life Karnataka

முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்ற கமலஹாசனின் பேச்சு கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னட மொழியை கமலஹாசன் அவமதித்து விட்டதாக கூறி அங்குள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இது தொடர்பான வழக்கில் கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக நீதிமன்றம் வற்புறுத்திய நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமலஹாசன் உறுதியாக இருந்தர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கமலஹாசனுக்கு ஆதரவாக ரசிகர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ் அமைப்புகளும் ஆதரவாக திரண்டன. இந்த நிலையில் கர்நாடகா தவிர்த்து கடந்த ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களே பெற்றது. இந்த நிலையில் கர்நாடகாவில் தக்ளிப் திரைப்படத்தில் வெளியிட அனுமதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம், தக் லைஃப் படத்தை வெளியிட கர்நாடக அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். வன்முறைகள் ஏற்பட்டால் அரசு அடக்க வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். படம் எடுக்க யாராவது தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என கூறியதோடு, தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.

இதை அடுத்து கமலஹாசன் மீதான சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது பெங்களூர் நீதிமன்றத்தின் உத்தரவு. அதாவது கன்னட மொழி குறித்து கமலஹாசன் பேசக்கூடாது என அவருக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கன்னட சாகித்திய பரிஷத் என்ற அமைப்பு கமலஹாசன் கன்னட மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து பேச தடை விதிக்க வேண்டும் என பெங்களூரு கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கமலஹாசன் கன்னட மொழி, கலாச்சாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க தடை விதித்ததோடு மனு தொடர்பாக ஆகஸ்ட் 30ஆம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் கன்னட மொழியை விட மொழியியல் மேன்மையை கூறும் எந்த ஒரு அறிக்கையும் கமலஹாசன் வெளியிடக்கூடாது. கன்னட மொழி, இலக்கியம், நிலம், கலாச்சாரத்தை புண்படுத்தும் வகையில் அல்லது அவதூறு செய்யும் வகையிலோ கமலஹாசன் எந்தவிதமான அறிக்கையோ, கருத்தோ, எழுதவோ, பதிவிடவோ கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. இந்த தடை ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், அன்றைய தினம் கமலஹாசன் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+