• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உங்கள் அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம் இது.. எப்படித் துடைக்கப் போறீங்க சாமி.. கமல் கேள்வி

|
  Pollachi Issue - பொள்ளாச்சி பயங்கரம்..கமல்ஹாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆவேசமாக பல கேள்வி

  சென்னை: பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆவேசமாக பல கேள்விகளைக் கேட்டுள்ளார்.

  பொள்ளாச்சி விவகாரம் தமிழகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது. பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவரும் தகித்துப் போய்க் கிடக்கின்றனர். எங்கு திரும்பினாலும் அந்த அப்பாவிப் பெண்களின் அவலக் குரல்கள்தான் இதயத்தை அறைந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அதிரடியாக பல கேள்விகளை ஆவேசத்துடன் எழுப்பியுள்ளார்.

  Kamal Haasan blasts CM on Pollachi issue

  இதுதொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து சில வரிகள்...

  பொள்ளாச்சி சம்பவ ஆடியோவைக் கேட்டது முதல் மனசு பதறுது. அந்தப் பொண்ணோட குரலில் இருந்த அதிர்ச்சி, பயம் , தவிப்பு திரும்பத் திரும்ப காதுல கேட்குது. நிர்பயா வுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக ஊர் உலகமே ஒன்றாக திரண்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ஒரு அறிக்கை விட்டார்.

  வலையில் சிக்கிய டாக்டர் மனைவி.. பொள்ளாச்சி பலாத்கார கும்பல் போனில் அதிர்ச்சி வீடியோ

  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொடூரக் குற்றங்களாக கருதப்பட்டு உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றார். அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் இந்த அரசு எப்படி கவனக்குறைவாக இருக்கிறது. பெண்ணைப் பெற்ற அத்தனை பேருக்கும் பதறுகிறது., உங்களுக்குப் பதறவில்லையா.

  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்று கூறுவதில் மும்முரம் காட்டுகிறீர்கள். ஆனால் தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி செய்யப்படும் என்று கூறுவதில் உறுதி காட்டவில்லையே. புகார் கொடுக்க வந்த பெண்ணின் பெயரைத் தவறாக சொல்லி விட்டதாக கூறுகிறார் எஸ்பி. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு எதிராக அவர் செய்த தவறை அரசாங்கம் ஏன் கண்டிக்காமல் இருக்கிறது.

  இதற்கு அடுத்த நாளே பெண்ணின் வீடியோ வெளி வருகிறது .. அது எப்படி. குற்றவாளிகள் அழித்து விட்டதாக சொன்ன வீடியோ எப்படி வெளியே வந்தது.

  முதலில் வந்த பாதி மறைக்கப்பட்ட வீடியோ வெளியே வந்தது எப்படி.. யார் வெளியிட்டது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக சொன்ன தலைமையின் உருவத்தை பாக்கெட்டில் வைத்துள்ள நீங்கள் செய்தது என்ன.

  Kamal Haasan blasts CM on Pollachi issue

  திருநாவுக்கரசின் மறுபக்கம்.. படிப்பு எம்பிஏ.. காதல் கல்யாணம்.. வண்டவாளம் அம்பலமாக ஓடிப் போன மனைவி!

  பாலியல் குற்றத்தை எதிர்த்துப் போராடிய மாணவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தினீர்கள். வன்முறையைப் பயன்படுத்தி அவர்களை பயமுறுத்த முயற்சி செய்துள்ளீர்கள். கோபத்தை பதிவு செய்தவர்களை அப்புறப்படுத்திய இந்த காவல்துறையா எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறது மிஸ்டர் சிஎம். உங்களைத்தான் கேட்கிறேன். உங்களுக்குத்தான் இத்தனை கேள்விகளும்.

  kamal

  பெயரைச் சொல்கிறீர்கள்.. வீடியோ வெளியிடுகிறீர்கள்.. இதைத் தட்டிக் கேட்டால் போலீஸை விட்டு அடிக்கிறீர்கள்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கேட்கவில்லை. 2 பெண்ணோட அப்பாவாக கேட்கிறேன்.. என்ன பண்ணி இந்த தப்புகளுக்கு பரிகாரம் செய்யப் போகிறீர்கள்.

  எவனாவது இதுபோல செய்ய நினைத்தால் அரசாங்கம் விடாது என்ற நம்பிக்கையை கொடுக்க வேண்டும்

  எப்ப செய்யப் போறீங்க.. இன்னும் எதுக்காக காத்திருக்கீங்க.. தேர்தல் முடியட்டும் என்றா. இரு பெரும் காப்பியங்களான மகாபாரதமும், ராமாயணமும் பெண்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க நடந்த போர்கள் பற்றியது. உங்க அம்மாவுக்கே ஏற்பட்டுள்ள அவமானம் இது.. எப்படி துடைக்கப் போறீங்க சாமி என்று கமல்ஹாசன ஆவேசமாக கேட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  வட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  ஸ்டிரைக் ரேட்
  AIADMK 50%
  DMK 50%
  AIADMK won 1 time and DMK won 1 time since 2009 elections

   
   
   
  English summary
  MNM leader Kamal Haasan has blasteds CM Edappadi Palanisamy in Pollachi issue.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more