சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை?- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kamal Press meet | திமுகவை நேராவாகவே விமர்சனம் செய்வேன் : கமல்ஹாசன்

    சென்னை: கிராம சபை கூட்டங்களை நாங்கள் நடத்தியவுடன் அதை பார்த்து காப்பியடிக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா என ஸ்டாலினை மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் என்பது நீண்ட நாட்களாக நடைபெறும் வழக்கமாகும். இது பண்டைய காலத்து நடைமுறையாகும். இந்த கூட்டங்களில் மக்களின் குறைகள் கண்டறியப்பட்டு தீர்வு காணப்படும்.

    கமல்ஹாசன்

    கமல்ஹாசன்

    அத்தகைய சக்தி வாய்ந்த கிராம சபை கூட்டங்கள் வெறும் சடங்குகளுக்காகவே நடத்தப்பட்டன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதை மீண்டும் நடத்தினார்.

    அவசியம்

    அவசியம்

    உத்தரமேரூரில் முதல் முறையாக கிராம சபை கூட்டத்தை நடத்திய கமல், தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் கூட்டத்தை நடத்தி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். தனக்கு வாக்களிப்பதன் அவசியத்தையும் அவர் விளக்கினார்.

    உதயநிதி

    உதயநிதி

    இது பெறும் வெற்றி அடைந்தவுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கிராம ஊராட்சி கூட்டம் என்ற பெயரில் பல்வேறு கூட்டங்களை பல்வேறு கிராமங்களில் நடத்தி வருகிறார். ஸ்டாலினே தன் தலைமையில் நடத்தி வருகிறார். அவரது மகன் உதயநிதியும் சில கூட்டங்களை நடத்தியுள்ளார்.

    வெட்கமாக இல்லை

    வெட்கமாக இல்லை

    இந்த நிலையில் சென்னையில் ஆர் ஏ புரத்தில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் கூறுகையில் தமிழகத்தில் 25 ஆண்டுகளாக நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் என்ன செய்தீர்கள். நேற்று வந்த ஒருவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே. உங்களுக்கு வெட்கமாக இல்லையா என விமர்சனம் செய்துள்ளார்.

    English summary
    Kamal Haasan criticises that why are you copying from the man who come to politics newly. He criticises MK Stalin on Gram Sabha meetings.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X