என் ஜோடி மஞ்சக் குருவி.. ‘தக் லைஃப்’ ஆட்டம் போட்ட கமல்ஹாசன்! அப்பாவே தெரியுறாரு.. எமோஷன் ஆன காயத்ரி!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக 'என் ஜோடி மஞ்ச குருவி' பாடலுக்கு அட்டகாசமாக நடனம் ஆடி இருந்தார் கமலஹாசன். இந்த நிலையில் கமலஹாசனின் நடனத்தை பார்க்கும் போது எனது அப்பாவின் ஞாபகம் வருகிறது என எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம்.
தமிழ் திரையுலகின் தற்போதைய நடிப்பு பல்கலைக் கழகம் என்றால் அது கமல்ஹாசன் தான். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கமல்ஹாசன் தமிழ் திரை உலகில் நாயகனாக வலம் வருகிறார். ஏராளமான இயக்குனர்களுடன் அவர் பணியாற்றி இருந்தாலும், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த நாயகன் திரைப்படம் தற்போது வரை பலரது பேவரைட் ஆக உள்ளது.
கமல்ஹாசனுக்கு இணையாக இயக்குனர்களில் மணிரத்னத்திற்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது. ஆக்சன், காதல், அரசியல் என அவரது திரைப்படங்கள் இப்போது வரை முக்கிய படங்களாக உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் மணிரத்னத்தோடு, முதன்முறையாக சிம்பு இணைந்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் சிம்பு, கமல்ஹாசன் உடன் அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கிறது.

படத்தின் டீசரும், ட்ரைலரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சென்னை, மும்பை, டெல்லி என மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு, ஏஆர் ரகுமான், அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டு படம் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற தக் லைப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் உற்சாகமாக நடனம் ஆடினார். குறிப்பாக விக்ரம் படத்தில் இடம்பெற்று இருந்த 'என் ஜோடி மஞ்ச குருவி' பாடலுக்கு அட்டகாசமாக நடனம் ஆடினார். மேலும் தன்னுடைய ட்ரேட் மார்க் நடன அசைவுகளை போட்டதை பார்த்து ரசிகர்கள் உற்சாக முழக்கமிட்டனர். இந்த வயதிலும் கமல்ஹாசன் அருமையாக எனர்ஜி குறையாமல் நடனம் ஆடி இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் நடனத்தை பார்க்கும் போது எனது தந்தையின் நினைவு வருவதாகவும் கமல்ஹாசன் நடனத்தில் தனது தந்தையை பார்க்கிறேன் என நெகிழ்ச்சியோடு பதிவிட்டு இருக்கிறார் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம். அவரது தந்தை ரகுராம் தான் அந்த பாடலுக்கு நடனம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
I see my father in him whenever he dances. Emotional 🥹.. I miss you appa. pic.twitter.com/LvkKFBuBUv
— Gayathri Raguramm - Say No To Drugs & DMK (@Gayatri_Raguram) May 26, 2025
பல மொழி சூப்பர் ஸ்டார்களின் நண்பராக இருந்தவர் ரகுராம். அவரது மனைவி, மகள் என அனைவருமே நடன இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சில படங்களை இயக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 1986 ஆம் ஆண்டு கமல் நடிக்க ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தில் பாடல்களுக்கு ரகுராம் மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். குறிப்பாக 'என் ஜோடி மஞ்சக் குருவி' பாடல் அப்போது மெகா ஹிட் அடித்தது. அதில் கமல்ஹாசனின் நடனமும் நடன அசைவுகளும் வெகுவாக புகழப்பட்டது. அதை வைத்து தான் காயத்ரி ரகுராம் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.
-
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications