“திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?" மநீம தலைவர் கமல்ஹாசன் கொடுத்த ‘பலே’ விளக்கம்!
சென்னை: "திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டேன் என சிலர் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். நீதிக்கட்சியில் இருந்து வந்தது திமுக, அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரிலும் நீதி உள்ளது. ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான், நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது" என மநீம நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் எம்.பி. பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று முதல் 21 ஆம் தேதி வரை 4 நாட்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெறுகிறது. இன்று காலையில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் கமல்ஹாசன். மாலையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நாளை காலை கோவை, மாலை மதுரை, நாளை மறுநாள் காலை நெல்லை, மாலை திருச்சி. 21 ஆம் தேதி காலையில் விழுப்புரம், மாலையில் சேலம் மற்றும் புதுச்சேரி மண்டலங்களைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.
மக்கள் நீதி மய்யத்துக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது? எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கருத்துக் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? என கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மநீம நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் எம்.பி, "திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டேன் என சிலர் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள். நீதிக்கட்சியில் இருந்து வந்தது திமுக, அதே போல மக்கள் நீதி மய்யம் கட்சி பெயரிலும் நீதி உள்ளது. ஆசியாவிலேயே மையவாதத்தை பின்பற்றும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான், நாட்டை இடது, வலது என பிரிப்பதை அனுமதிக்க கூடாது" எனக் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications