Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன கையோடு கமல்ஹாசன் எங்கே போனார் தெரியுமா?.. "வேற லெவல் ஆண்டவரே!"

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் நேற்று டிஸ்சார்ஜ் ஆனவுடன் நேராக பிக்பாஸ் அரங்கத்திற்கு சென்றுவிட்டார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 100 நாட்களில் 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்துள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் 23 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து பிக்பாஸ் அரங்கில் தோன்றிய கமல், கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இரு தவணை

இரு தவணை

மேலும் தான் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டதால்தான் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றார். இதையடுத்து கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது தோழி ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என அறிவித்தார். அதன்படி கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

சீசன் 5

சீசன் 5

இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி கடந்த 5 ஆண்டுகளாக பார்த்து பழகிய ரசிகர்களால் கமல் இல்லாத ஒரு நிகழ்ச்சியை பார்க்க மனமில்லை. இது கமலின் அரசியல் செயல்பாடுகளை திட்டி தீர்த்தவர்களும் "உங்களை எங்களுக்கு பிடிக்காவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை. எனவே விரைவில் நலம் பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வாருங்கள்" என கூறியிருந்தனர்.

டவிட்டரில் அழைப்பு

டவிட்டரில் அழைப்பு

கடந்த 4 நாட்களுக்கு முன்பு, 83 என்ற படத்தின் டிரைய்லரை கமல்ஹாசன் வெளியிட்டு பேசியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் "ஆண்டவரே பார்க்க உடல்நிலை நன்றாக ஆகிவிட்டது போல் தெரிகிறது. இன்னும் ஏன் மருத்துவமனையில் இருக்கிறீர்கள், சீக்கிரம் வீட்டுக்கு வாருங்கள். நீங்கள் இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை" என ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

கொரோனா நெகட்டிவ்

கொரோனா நெகட்டிவ்

இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி கமல்ஹாசனுக்கு கொரோனா நெகட்டிவ் ஆனது. ஒரு நாள் மருத்துவமனையில் இருந்துவிட்டு கமல்ஹாசன் 4ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் டிஸ்சார்ஜ் ஆன கமல், அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

நேற்றைய தினம் பிக்பாஸ் ப்ரோமோ வெளியானதை கண்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி. மருத்துவமனையிலிருந்து தற்போதுதான் டிஸ்சார்ஜ் ஆனார், அதற்குள் எப்படி பிக்பாஸ் செட்டில்? பின்னர்தான் தெரிந்தது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்லாமல் பிக்பாஸ் அரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு அமர்ந்தபடியே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். கமலின் அர்ப்பணிப்பு வேற லெவல் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இன்றைய தினம் கமல்ஹாசன் ரெஸ்ட் எடுப்பதால் பிக்பாஸ் ஷூட்டிங் இல்லை என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+