சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தண்ணீர் பாட்டில், ஸ்நாக்ஸ், ஏசி ரூம்.. இது பிரஸ் மீட்.. கமல்ஹாசனிடம் கற்றுக்கொள்வாரா ரஜினிகாந்த்?

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி, 3வது ஆண்டில் காலடி எடுத்து வைத்த நிலையில், அதன் தலைவர், கமல்ஹாசன் இன்று அதிரடியாக பொருளாதார அறிக்கையை வெளியிட்டு பேட்டியளித்தார். தி.நகர் அலுவலகத்தில் வைத்து இந்த பேட்டி நடைபெற்றது.

Recommended Video

    திராவிட கட்சிகளை மீறி உங்களால் ஜெயிக்க முடியுமா.. பிரஸ் மீட்டில் வந்த கேள்வி.. கமல்ஹாசன் செம பதில்

    பெரும்பாலும் அனைத்து ஊடகங்களில் இருந்தும் சீனியர் பத்திரிக்கையாளர்கள், இதை, கவர் செய்ய சென்றிருந்தனர். ஏனெனில் முன்கூட்டியே, திட்டமிடப்பட்டு, அறிவிப்பு வெளியிட்டு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இது.

    தி.நகரில் ஏசி அறையில் வைத்து, பிரஸ் மீட் செய்தார் கமல். ரொம்பவே அமைதியான ஒரு சுற்றுச்சூழலில், அற்புதமாக நடத்தப்பட்ட பிரஸ் மீட் இது.

    வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம், 1 டிரியல்லன் டாலர் பொருளாதாரம்- கமலின் பொருளாதார திட்டம்வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு ஊதியம், 1 டிரியல்லன் டாலர் பொருளாதாரம்- கமலின் பொருளாதார திட்டம்

    குடிநீர்

    குடிநீர்

    பெஞ்ச், சேர் எல்லாம் போட்டு நிருபர்களை அமர் வைத்து, அவர்களுக்கு குடிநீர் பாட்டில் கொடுத்து, ஸ்நாக்ஸ் கொடுத்து கவனிக்க ஏற்பாடு செய்திருந்தார், கமல்ஹாசன். இதனால், தள்ளுமுள்ளு இல்லாமல், ஒவ்வொரு நிருபர்களும் அடுத்தடுத்து பொறுமையாக கேள்வி கேட்க முடிந்தது. கமலும், பொறுமையுடன், நீண்ட விளக்கங்களுடன், நிம்மதியாக பதில் கொடுக்கும் வாய்ப்பு அங்கு இருந்தது.

    ஒரே சத்தம்

    ஒரே சத்தம்

    கேமரா ஆடுவது, மைக்கில் பேட்டி சத்தம் கேட்காமல், நிருபர்கள் கத்தும் சத்தம் கேட்பதெல்லாம் இங்கு இல்லை. வேறு எங்கு இருந்தது என்கிறீர்களா? ரஜினிகாந்த் பிரஸ்மீட்தான். அவரது பிரஸ்மீட்டின் டிரேட் மார்க்காகவே அது மாறிவிட்டது. எப்போதுமே தனது வீட்டின் கேட்டுக்கு வெளியே நின்றபடி, நிருபர்களையும் நிற்க வைத்து பேட்டியளிப்பார் ரஜினி. ஒரே கூச்சல் குழப்பம் இதற்கு நடுவேதான் டிவியில் லைவ் வெளியாகும்.

    தெருவில்

    தெருவில்

    இதனால்தான், திமுக தலைவர் ஸ்டாலின் கூட ஒருமுறை, யாராவது கேட்டை திறந்தால் கூட, தலைப்பு செய்தியாக்குகின்றன ஊடகங்கள் என அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தார். ஒரு ஹோட்டலை புக் செய்து பிரஸ் மீட் செய்யாவிட்டால் கூட பரவாயில்லை, வீட்டுக்குள் கூட விடாமல் தெருவில் நிற்க வைத்து பிரஸ் மீட் செய்வது ரஜினி வாடிக்கையாகிவிட்டது.

    முன்னேற்பாடு தேவை

    முன்னேற்பாடு தேவை

    ஏர்போர்ட்டில் மைக்கை நீட்டி கருத்து கேட்பது வேறு. ஆனால், ஒரு நபர் தானே அழைத்து நடத்தும் பிரஸ் மீட் என்பது வேறு. அதற்கு உரிய முன்னேற்பாடுகள் அவசியம். அந்த வகையில், கமல்ஹாசன் முன்னோடியாக இருக்கிறார். திரைத்துறையில் எப்படி கமல் ரஜினியைவிட சீனியரோ, அதேபோலத்தான், இதுபோன்ற, சில அடிப்படை விஷயங்களிலும் கற்றுத்தருவதில் கமல் சீனியராக இருக்கிறார். ஆனால், பாடம் கற்பாரா ரஜினிகாந்த் என்பதே கேள்வி.

    English summary
    Kamal Haasan given seats to journolists while doing press meet unlike Rajinikanth who always meet the journolists on the roadside of his house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X