மருத்துவமனையிலிருந்தபடியே பிக்பாஸை கமல் தொகுத்து வழங்குகிறாரா?.. வைரல் வீடியோ.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து போட்டியாளர்களிடமும் ஆடியன்ஸிடமும் பேசிய போது ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கமல்ஹாசன் அறிவித்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களுக்கு கமல்ஹாசனை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் நடந்துள்ளன.
தற்போது 5ஆவது சீசன் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

முதல் சீசன்
முதல் சீசனில் இருந்த சுவாரஸ்யம் அடுத்தடுத்த சீசன்களில் இல்லை என்பதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கமலுக்காக நிகழ்ச்சியை பார்ப்போர் அதிகரித்துள்ளனர். இந்த இரு நாட்களிலும் கமல்ஹாசன் அரசியல் பேசுவார், புத்தகங்களை பரிந்துரைப்பார், போட்டியாளர்களை லேசாக தட்டி கொடுப்பார்.

மருத்துவமனை நிர்வாகம்
இந்த நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி
எனினும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாலும் சில நாட்களுக்கு வெளியே எங்கும் செல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறிருக்கும் போது கமல்ஹாசன் மருத்துவமனையில் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

ரம்யா கிருஷ்ணன்
முதலில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் முதல் புரோமோ வெளியானது. அதில் முதலில் மருத்துவமனையிலிருந்து கமல்ஹாசன் சிறிது நேரம் பேசுகிறார். பின்னர் எனக்கு உதவுவதற்காக ஒரு தோழியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என கூறியபோது ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு வருகிறார். எனவே கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு வரும் வரை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications