ஸ்டாலின், விஜய்யை "வீழ்த்திய" கமல்! எடப்பாடியை விட ஓபிஎஸ் மேல்? திருமா டாப்… துரை வைகோ குறைவு!
சென்னை: எக்ஸ் தளத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவராக நடிகர் கமல்ஹாசன் வலம் வருகிறார் எனப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் எந்தக் கட்சி மாஸ் எனக் கேட்டால் யாரும் உடனே சொல்லிவிடுவார்கள். அந்தப் பட்டியலில் நிச்சயம் திமுக மற்றும் அதிமுக கட்டாயம் இருக்கும். வளர்ந்து வரும் பட்டியலில் பலரும் பாஜகவைச் சொல்லலாம். இரண்டாம் கட்ட நகரங்களுக்குப் போய் கேட்டால்கூட தெரியும் அளவுக்குச் சீமான் இருந்து வருகிறார்.

ஆனால், நாம் தயாரித்திருக்கும் இந்தத் தலைவர்களின் பலப் பரீட்சை பட்டியல் கள அரசியல் சார்ந்தது அல்ல; 'தள' அரசியல் சார்ந்தது. அது என்ன 'தளம்' என்கிறீர்களா? சமூகவலைத்தளம்.
அந்த சமூக வலைத்தளத்தில் யார் பலமாக இருக்கிறார்கள். யாருக்குச் செல்வாக்கு அதிகமாக உள்ளது என ஒரு பட்டியல் தயாரித்தோம். தேர்தல் நேரத்தில் பலரும் யாருக்கு எந்தத் தொகுதியில் பலம் இருக்கிறது எனக் கணக்குப் போடும் நேரத்தில் கொஞ்சம் மாற்றி யோசித்தோம்.

ட்விட்டர் 'எக்ஸ்' தளத்தில் மு.க.ஸ்டாலினுக்கு இரண்டு கணக்குகள் உள்ளன. ஒன்று அவர் முதல்வர் என்பதால் CMOTamilNadu என்ற பெயரில் ஒரு கணக்கு இயங்கி வருகிறது. அதில் அவரை 2 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். இந்தக் கணக்கில் அவர் வெறும் 28 பேரை மட்டுமே பின் தொடருகிறார்.
அடுத்து M.K.Stalin என்ற பெயரிலேயே இவருக்கு ஒரு தனிக் கணக்கு உள்ளது. அதில் கிட்டத்தட்ட 3.7 மில்லியன் பேர் அவரைப் பின் தொடர்ந்து வருகிறார்கள். இந்தக் கணக்கிலிருந்து அவர் 89 பேரை மட்டுமே பின் தொடர்கிறார். அதில் சிலர் பத்திரிகையாளர்கள் சில பத்திரிகை நிறுவனக் கணக்குகள். மற்றபடி சில மாற்றுக்கட்சி நபர்களைக் கூட பின் தொடர்ந்து வருகிறார்.

முதல்வர் பற்றி சொன்னதும் அடுத்த இடம் யாருக்குத் தரவேண்டும்? புரோட்டோக்கால் படி எதிர்க்கட்சித் தலைவருக்குத் தானே? ஆம்! எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் தளத்தை 607.1கே பேர் பின் தொடர்கிறார்கள்.
ஸ்டாலின் மில்லியன் கணக்கில் ஆட்களை வைத்துள்ளபோது பழனிசாமி ஆயிரம் கணக்கில் மட்டுமே ஆட்களை ஈர்த்துவைத்துள்ளார். இவர் 2 பக்கங்களை மட்டுமே பின் தொடர்கிறார். அதிமுக கட்சி கணக்கு ஒன்று. அதிமுக ஐடி விங்க் கணக்கு ஒன்று. அதற்கு மேல் இவரது விருப்பம் நீளவில்லை.

இவருக்கு அடுத்து பட்டியல் படி ஓபிஎஸ் பற்றித்தான் சொல்ல வேண்டும். ஆனால், அவரைவிட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பலம் வாய்ந்தவராக இருப்பதால் அவரைப் பற்றிச் சொல்லிவிடுவோம்.
இவர்தான் இருப்பதிலேயே டாப். கமலை கிட்டத்தட்ட 8 மில்லியன் பேர் ஒரு கணக்கில் மட்டும் பின் தொடர்கிறார்கள். ஸ்டாலினுக்கு இரண்டு கணக்கையும் சேர்த்தால் 5.7 மில்லியன் பேர்தான் உள்ளனர். ஆனால், கமல்ஹாசனுக்கு 8 மில்லியன் உள்ளன. அவர் வெறும் 10 பேரை மட்டுமே பின் தொடர்கிறார்.

இதில் வியப்பு என்னவென்றால், இன்றைய இளம் தலைமுறையினர்தான் எக்ஸ் தளத்தில் அதிகம் உள்ளனர். அந்தத் தலைமுறையின் நாயகனாக இருப்பவர் விஜய். அவருக்கு 5 மில்லியன் பேர்தான் உள்ளனர். இவரைவிட்ட கூடுதலாக 3 மில்லியன், அதாவது 30 லட்சம் பேரை அதிகம் வைத்துள்ளார் கமல்.
விஜய் தன் கணக்கிலிருந்து ஒரே ஒருவரைத்தான் பின் தொடர்கிறார். அது அவரது தமிழக வெற்றிக் கழகம் அக்கெளண்ட்.

அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் எக்ஸ் தளக் கணக்கு டிவிகே விஜய் என்ற பெயரில்தான் தொடங்கப்பட்டுள்ளது. அதில் வெறும் 193கே பேர்தான் உள்ளனர். அதே மக்கள் நீதி மய்யம் கணக்கில் 201.7 கே பேர் உள்ளனர். அதிலும் கமல் முன்னால் நிற்கிறார்.
இப்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு வருவோம். அவர் 937.9கே வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியைவிட இவரை அதிகம் பேர் பின் தொடர்கிறார்கள்.

டிடிவி தினகரனை 327.1கே பேர் பின் தொடர்கிறார்கள். தொழில் நுட்ப அதிகம் தெரியாத ஓபிஎஸ் இவரை விட அதிகம் பேரை வைத்துள்ளார்.
டிடிவி தினகரனைவிட விகே சசிகலாவின் நிலை படுபாதாளத்தில் உள்ளது. அவரை வெறும் 10 ஆயிரம் பேர்தான் பின் தொடர்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் அரசியல் உலகில் பெரும் தலைகள். ஆனால், இளந்தலை வராக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் கணக்கை 755.5கே பேர் பின் தொடர்கிறார்கள். இந்த எண்ணிக்கை எடப்பாடியைவிட அதிகம். ஓபிஎஸ்சை விடக் குறைவு.

அண்ணாமலை என்றால் அங்கே கட்டாயம் உதயநிதி பெயர் வந்துவிடும். அவரது கணக்கை 3.6 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். கிட்டத்தட்ட ஸ்டாலின் கணக்கில் உள்ளவர்களின் எண்ணிக்கை அப்படியே உதய் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதே வரிசையில் சீமானையும் சொல்லி ஆகவே வேண்டும். இணையதளத்தில் அவரது தம்பிகளின் வேகம் அதிகம். அப்படி இருந்தும் செந்தமிழன் சீமான் கணக்கை 44.7கே பேர்தான் பின் தொடர்கிறார்கள்.

இவர்களைவிட அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தனது கணக்கில் 1.1 மில்லியன் பேரை வைத்துள்ளார். வேறு எந்தக் கட்சியைவிட இவர் முன்னணியில் உள்ளார்.
உள்ளதிலேயே படு மோசமாக இருப்பது துரை வைகோ கணக்குதான். அவர் 3,608 பேரைத் தாண்டவில்லை. அதைவிட மதிமுக கட்சிக் கணக்கை வெறும் 828 பேர்தான் பின் தொடர்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கணக்கை 441.6கே பேர்தான் பின் தொடர்கிறார்கள். இவரது தந்தை டாக்டர் ராமதாஸ் கணக்கில் பின்தொடர்பவர்களில் எண்ணிக்கை 339.8 கே உள்ளது.
பாமக பற்றி பேச்சு வந்தாலே நேரடியாக எதிர் அணியில் இருக்கும் தொல். திருமாவளவன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவே முடியாது. அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 675.7 கே. அதாவது அன்புமணியைவிட, மருத்துவர் ராமதாஸைவிட இவர் பலம் பொருந்தியவராக உள்ளார்.

பாஜக கூட்டணியில் இணைந்தது மூலம் தனது கட்சியைப் பற்றிய செய்தியை ஊடகங்களில் பேச வைத்துள்ள ஜி.கே.வாசனின் கணக்கை 10.9 கே, அதாவது 10 ஆயிரம் பேர்தான் பின் தொடர்கிறார்கள்.
இந்தப் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் சில தலைவர்கள் அரசியல் களத்திலும் ட்விட்டர் தளத்திலும் வீக் தான்!





-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications