திரும்பிவந்த இந்தியன் தாத்தா.. சில்வர் தாடி, செம ஸ்டைல் லுக்குடன் கமல்.. அதிர வைத்த பிக்பாஸ் ப்ரோமோ!
சென்னை: ஆஹா பிக்பாஸ் பிரோமோ நேற்று வெளியானது. இதில் இந்தியன் தாத்தாவின் ஸ்டைல், சொன்னபடி கேளு பாடலின் ஸ்டைல் ஆகியவற்றுடன் ஆடிக் கொண்டே வரும் கமல், அவரது தாடி என மொத்தமும் செம ஸ்டைலிஷ்ஷாக இருப்பதால் ரசிகர்களும் தொண்டர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
கமல்ஹாசன் ஒரு பன்முகத் திறமை கொண்டவர். நடிகன், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், இலக்கியவாதி, அரசியல்வாதி என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதனால்தான் அவருக்கு சகலகலா வல்லவன் என்ற பெயரும் உண்டு.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை கமல்ஹாசன் கடந்த 4 ஆண்டுகளாக தொகுத்து வருகிறார். தற்போது பிக்பாஸின் சீசன் 4 தொடங்கவுள்ளது. இதற்கான ப்ரோமோவை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

செம நடனம்
அதில் ஒரு வீட்டு வாசலில் நின்றிருக்கும் கமல் சொன்னபடி கேளு எனும் சிங்கார வேலனின் ரீமிக்ஸ் பாடலுக்கு இடுப்பை வளைத்து செமையாக நடனம் ஆடுகிறார். கமலுக்கு வயதானாலும் டான்ஸ் மீதான அவரது ஈடுபாடு இன்னும் குறையவில்லை என்று சொல்வதற்கேற்ப அந்த நடனத்தில் அப்படி ஒரு கிரேஸ் இருக்கிறது. அதிலும் அந்த சீன், இருட்டில் காட்டப்படுகிறது.

கமல் ஆடுவது
பின்பக்க வெளிச்சத்தில் நின்று கொண்டு கமல் ஆடுவது அற்புதமாக உள்ளது. அதில் இந்தியா தாத்தா போல் நாற்காலியில் உள்ள கட்டையை சுழற்றிவிடும் காட்சிகள் சூப்பர். இந்த பாடலில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ என இல்லாமல் கொரோனா விழிப்புணர்வு பாடல் போல் உள்ளது. ஆன்லைன் வகுப்பை புறக்கணிக்க நினைக்கும் சிறுவன், காய்கறி வாங்க அலைமோதும் கூட்டம்....

காட்சிகள்
இத்தனை நாள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தும் கிடைத்ததால் ஆண்கள் சிலருக்கு சோம்பேறித்தனம் ஏறி போனது, மாத்திரை வாங்குவதாக கூறிவிட்டு லாக்டவுனில் ஊர் சுற்றுவது, மாஸ்க் அணியாமல் பெட்ரோல் பங்க் செல்வது.., 65 வயதுக்கு மேற்பட்டவர் வீட்டை விட்டு வெளியே செல்வது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

டான்ஸ் மாஸ்டருடன்
இந்த காட்சிகளுக்கு உரிய மெசேஜை பிக்பாஸ் சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி படமாக்கப்பட்ட போது டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் இருக்கும் கமல் மிகவும் அழகான லுக்குடன் ஸ்டைல்லாக இருக்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கமலை நீண்ட நாட்களுக்கு பிறகு, நடிப்பு, ஆட்டம் , பாட்டத்துடன் பார்க்கும் ரசிகர்கள் குதூகலத்துடன் உள்ளார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications