மாநில உரிமையை விட்டுத்தராத போக்கு.. விஜய்க்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட வேண்டும் என்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.

அண்மையில் திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. வந்தே மாதரம் பாடல், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் அமைதி காத்து வந்தார்.

Kamal haasan Vijay TVK

இந்த நிலையில் சட்டசபையில் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது 1970களில் இருந்தே தமிழ்நாட்டின் மரபாக உள்ளது. அதனை பின்பற்றுவதில் தவெக அரசு சமரசம் செய்யவே செய்யாது. இந்த தீர்மானத்திற்கு கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார்.

இதன்பின் திமுக தரப்பில் கோவி.செழியன், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கட்சி தரப்பில் அமைச்சர் விஸ்வநாதன், விசிக தரப்பில் அமைச்சர் வன்னி அரசு, ஐயூஎம்எல் சார்பாக ஷாஜகான், பாமக தரப்பில் சிவகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாரிமுத்து, சிபிஎம் சார்பாக செல்லசாமி மற்றும் தவெக சார்பாக ராஜ்மோகன் ஆகியோர் தீர்மானத்தை வரவேற்று பேசினர்.

தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் திமுக தரப்பில் வைக்கப்பட்டது. தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதற்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது; வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+