Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்ஜிஆரிடம் அழுகை.. விக்ரம் டூ தக் லைஃப்.. கமல் எதிர் கொண்ட சவால்கள்! வெற்றி பெற்ற ’V’ செண்டிமெண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என பேசியதாக கமல்ஹாசனுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு தமிழகம் முழுவதும் கமலுக்கு ஆதரவு கிளம்பி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கமல்ஹாசன் படங்கள் என்றாலே ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் வந்துவிடும் என்பது தெரிந்ததுதான். இது ஒரு புறம் இருக்க கமல்ஹாசனை பொறுத்தவரை 'வி' என்ற சென்டிமென்ட் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது.

உலக நாயகனிலிருந்து விண்வெளி நாயகனாக மாறியிருக்கிறார் கமல்ஹாசன். தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் என்றால் அது நிச்சயம் கமல்ஹாசன் மட்டும் தான்.

காரணம் குழந்தை நட்சத்திரம், நடன உதவி இயக்குனர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடிகர், தொழில்நுட்ப கலைஞர் என கமலுக்கு தெரியாத துறைகளை கிடையாது.
சினிமாவில் எந்த தொழில்நுட்பம் அறிமுகமானாலும் அதனை ஒரு கை பார்த்து விடுவது கமலின் வழக்கம்.

Kamal Haasan kannada cinema

அது மட்டுமல்லாமல் சமூகம், அரசியல், உலக அறிவு என கமல்ஹாசனின் அறிவு பறந்துபட்டது. நடிப்புக்கு கமல் என்றால் இயக்கத்துக்கு மணிரத்னம். அவர்களது கூட்டணியில் வெளியான நாயகன் திரைப்படம் இன்று வரை பலருக்கு பாடமாக இருக்கிறது. அந்த ஜோடி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு இணைய போகிறது என்ற தகவலே பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. தக் லைஃப் படத்தின் மூலம் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்தினமும் கமலும் கரம் கோர்த்தனர்.

இந்த கூட்டணியில் சிம்புவும் திரிஷாவும் இணைந்து கொள்ள எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனில் பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என பேச அது கன்னட அமைப்பினரை கோபத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கன்னடம் பேசுபவர்களை அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில அமைப்பினர். ஆனால் இந்த விவகாரத்தில் தான் சொன்னது உண்மை, மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறார் கமல்ஹாசன். அவருக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் அமைப்புகளும் ஒன்று திரண்டிருக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க கமல்ஹாசன் படங்கள் சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. 1986 இல் வெளியான விக்ரம் படம் தொடங்கி விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் பல பிரச்சனைகளை சந்தித்தார். 1986 இல் ராஜசேகர் இயக்கத்தில் சுஜாதாவின் கதையோடு கமல் நடித்த படம் விக்ரம். அக்னிபுத்திரன் என்ற ஏவுகணையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் பல பெருமைகளை கொண்டது. முதன் முதலில் ஐபிஎம் கம்ப்யூட்டரை காட்டியது இந்த படத்தில் தான் என்பார்கள். அந்த காலத்திலேயே ஒரு கோடி ரூபாய் பொருட் செலவில் எடுக்கப்பட்ட படத்தின் கதையை வார பத்திரிகை ஒன்று புகைப்படங்களோடு வெளியிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கமல் எம்ஜிஆர் இடம் சென்று அழுததாகவும் கூறப்படுவது உண்டு, தெலுங்கில் விக்ரம் என மற்றொரு படம் வெளியாக ஏஜென்ட் விக்ரம் என்ற பெயரோடு இந்த படம் வெளியானது, அதனால் வெற்றி பெறவில்லை எனவும் சொல்லப்படுவதுண்டு, ஆனால் மிகப்பெரிய உழைப்பை கொட்டி இருந்தார் இந்த படத்துக்கு.

அதற்கு பிறகு தேவர் மகன் படத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியை உயர்த்தி காட்டுவது போலவும் குறிப்பிட்டது, தரையில் அமர்ந்து சாப்பிடுவது, கும்பிடு போடுவது என சாதிய ரீதியிலான காட்சிகளை வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கமல் வாழ்க்கையில் அதிக பிரச்சனைகளை சந்தித்த படம் என்றால் விருமாண்டியை குறிப்பிடலாம். முன்னதாக இந்த படத்துக்கு சண்டியர் என வைக்கப்பட்டிருந்தது. இந்த பெயர் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தி பிடிப்பது போலவும் சில சமூகத்தை அடக்குவது போல இருப்பதாக கூறி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சனையை கிளப்பினார். பின்னர் விருமாண்டி என மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. படத்தில் இடம்பெற்ற சில வசனங்களும் காட்சிகளும் கூட நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதற்கடுத்ததாக விஸ்வரூபம். அமெரிக்காவின் சிஐ ஏஜென்ட் ஆக கமல் நடித்திருந்த இந்த படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாகவும், கொலை உள்ளிட்டவற்றின் போது அல்லா ஹு அக்பர் என முழக்கமிடுவது போல இருப்பதாக இஸ்லாம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மிகப் பெரிய அளவில் இந்த படத்திற்கு தான் முதலில் செய்திருப்பதாகவும், இந்த படத்தை வெளியிடவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியே செல்வதை தவிர வேறு வழியில்லை என கமல்ஹாசன் பேசினார்.

அப்போது ஒரு சில பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த படம் வெளியானது. அதற்கு பிறகு விஸ்வரூபம் 2 படமும் பல சர்ச்சைகளில் சிக்கியது. கடைசியாக வெளியான விக்ரம் மட்டுமே எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியான கமல் படம் என அவரே சொல்லி இருக்கிறார், இந்த நிலையில் தான் தற்போது தக் லைஃப் படத்திற்கு எழுந்திருக்கும் சிக்கல் கமல் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

ஒருவேளை இதுவும் படத்துக்கான புரமோஷன் ஆக கூட இருக்கலாம் என்கின்றனர். இது ஒரு புறம் இருக்க கமல்ஹாசனை பொறுத்தவரை வி என வரும் வகையில் இருக்கும் படங்கள் அவருக்கு பலத்த வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் வானம்பாடி, வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், 1986 விக்ரம், வெற்றி விழா, விருமாண்டி, வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, விக்ரம் என அவரது வி படங்கள் மெகா ஹிட் அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+