சூரிய வெளிச்சம் வேண்டாம்! டார்ச்லைட்டே போதும்! 12 தொகுதிகள் பட்டியலுடன் ஸ்டாலினை சந்திக்கும் கமல்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 'டார்ச்லைட்' சின்னத்தில் போட்டியிட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் கட்சிக்கு அதிக வாக்கு வங்கி இருக்கும் 12 தொகுதிகளின் பட்டியலையும் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கொடுப்பார் என சொல்லப்படுகிறது.
சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

டார்ச்லைட்
இந்த கூட்டத்தில் டார்ச்லைட் சின்னத்தில் போட்டி என்பது குறித்தும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்படும் என தெரிகிறது.
மக்கள் நீதி மய்யம்
2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் சுமார் 8 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு 234 தொகுதிகளிலும் பொது சின்னமான டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.
நாடாளுமன்றத் தேர்தல்
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. அதில் 0.40 சதவீதம் வாக்குகளை பெற்றது. இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 4ஆவது அணியை அமைத்து தேர்தலை சந்தித்தது.
சரத்குமார்+ பாரிவேந்தர்
அதாவது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. இதில் கமல்ஹாசனின் மநீம 110 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
கோவை தெற்கு
ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் 3ஆவது, 4 ஆவது இடத்திற்கு சென்றது. இந்த தேர்தலில் 2.62 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. இந்த தேர்தலில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 2000 வாக்குகளில் தோல்வியுற்றார்.
திமுக+ மக்கள் நீதி மய்யம்
இதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரமும் செய்திருந்தார். அதற்கு பதிலாக தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க கோரியது.
மாநிலங்களவை எம்பி
அதன்படி கமல்ஹாசன் தற்போது மாநிலங்களவை எம்பியாக உள்ளார். தான் கட்சி தொடங்கியது முதலே டார்ச்லைட்டுடன் பயணித்து வந்த கமல்ஹாசன், திமுகவுக்கு எதிராக டிவியை உடைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
விமர்சனம்
அப்படிப்பட்ட நிலையில் யாரை எதிர்த்தாரோ அந்த திமுகவுடனேயே கூட்டணிக்கு அதுவும் ஒரு எம்பி பதவிக்காக அவர் திமுக கூட்டணிக்கு போனது கடும் விமர்சனங்களுக்குள்ளானது. ஆயினும் சில கூட்டங்களில் அவர் தரப்பு நியாயம் என கூறி ஒரு சில காரணங்களை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மக்கள் நீதி மய்யம் தொடங்கவுள்ளது. கடந்த காலங்களில் பரீட்சயம் இல்லாத கட்சி சின்னங்களில் போட்டியிட்டு தோல்வி காண விரும்பாத திமுக, அக்கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது.
உதயசூரியன்
அதாவது கொமதேக, ஐஜேகே, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை உதயசூரியன் சின்னத்திலேயே கடந்த காலங்களில் போட்டியிட்டன. இவ்வளவு ஏன் அனைவருக்கும் தெரிந்த மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் பறிக்கப்பட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொது சின்னமான தீப்பெட்டி சின்னம் கொடுக்கப்பட்டது.
துரை வைகோ ஆதங்கம்
ஆனால் திமுக தலைமையோ மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னதாக தெரிகிறது. இதை திமுக அமைச்சர்கள் இருந்த ஒரு மேடையில் கண் கலங்க கூறி மறுப்பை தெரிவித்தார் துரை வைகோ. மற்ற சின்னத்தில் போட்டியிட நாங்கள் ஏன் இத்தனை செலவு செய்து கட்சியை நடத்த வேண்டும் என்ற ரீதியில் அவர் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்.
பிடிவாதம் பிடித்த துரை
இதையடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என துரை வைகோ பிடிவாதமாக இருந்து அதே சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார்.
12 தொகுதிகளுக்கான பட்டியல்
இதையெல்லாம் அறிந்த கமல்ஹாசன், தங்களையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்துவிட்டால் என்ன செய்வது என யோசிக்கிறார். எனவே தங்களுக்கு கொடுக்கப்பட்ட டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளார். மேலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 12 தொகுதிகளின் பட்டியலையும் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் கொடுக்க போகிறாராம். இதுகுறித்துதான் இன்றைய தினம் நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்துவார் என சொல்லப்படுகிறது.
அநேகமாக கோவை தெற்கு தொகுதியை மநீம கேட்கும் என தெரிகிறது. அது போல் சென்னையில் 2, 3 தொகுதிகளில் போட்டியிட்ட மநீம 3, 4 ஆவது இடங்களை பெற்றதால் அந்த தொகுதிகளையும் கேட்கலாம் என சொல்லப்படுகிறது.
-
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications