ஆஹா.. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லிஸ்ட்.. பரமக்குடியில் கமல்ஹாசன் பெயர் இல்லை.. என்ன பிளான்?
சென்னை: சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 70 வேட்பாளர்கள் பட்டியலை அந்த கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பரமக்குடி தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. கருப்பு ராஜ் என்ற வேட்பாளர் களமிறங்கியுள்ளார்.
Recommended Video

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கமல்ஹாசனின் சொந்த ஊராகும். நீண்ட நாட்களாகவே அவர் அங்கு தான் போட்டியிடப் போகிறார் என்ற ஒரு பேச்சு நிலவி வந்தது.
இந்த நிலையில்தான், 70 வேட்பாளர்கள் பட்டியலை இன்று சென்னையில் அறிவித்தார்.

வாசித்த கமல்
கமல்ஹாசன் ஒவ்வொரு தொகுதிக்கும், வேட்பாளர் பெயரை அறிவித்தபோது சுற்றியிருந்த நிர்வாகிகள் கைதட்டி ஆதரவை தெரிவித்தனர். தானே வேட்பாளர்கள் பெயரை அறிவித்தால் பிணைப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இதைச் செய்வதாக கமல் விளக்கம் அளித்திருந்தார்.

பரமக்குடி தொகுதி
பரமக்குடி என்று அவர், சொன்னபோது அங்கு பெரும் நிசப்தம் நிலவியது. பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. வேட்பாளர் பெயரை கருப்புராஜ் என்று கமல்ஹாசன் அறிவித்தபோது ஒரு நிமிடம் நிர்வாகிகள் கைதட்ட மறந்துவிட்டனர். அதன் பிறகு சுதாரித்துக்கொண்டு கைதட்டினர் என்றால் எந்த அளவுக்கு கமல்ஹாசன் அங்கு போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

கமல் கூட்டணி
கமல்ஹாசன் கட்சி கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ கட்சி ஆகியவை இருக்கின்றன. இப்போது முதல் கட்டமாக, தான் வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளார் கமல்ஹாசன். அடுத்த வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் போது அவரது பெயரும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்னையில் போட்டி?
பரமக்குடியில், கமல்ஹாசன் போட்டியிடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதால் அவர் சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடும், வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் கட்சியின் தலைவர் போட்டியிடாவிட்டால் அது எழுச்சியை ஏற்படுத்தாது என்பதால் கமல் களம் காண்பார் என்று அடித்துச் சொல்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications