ஆன்டி இந்தியன்.. எச்.ராஜாவை பார்த்ததும் டீவியை ரிமோட்டால் உடைத்த கமல்.. வைரல் வீடியோ!
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பிரச்சாரங்களில் கமல்ஹாசன் தீவிரமாக கட்சிகளை எல்லாம் விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் தற்போது வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவின் தொடக்கத்தில் முதலில் திமுக தலைவர் ஸ்டாலின் டிவி ஒன்றில் பேசுகிறார். நான் கருணாநிதியின் மகன் என்று அவர் கூறுகிறார். உடனே கமல்ஹாசன் முகம் கோபமாகி கோணலாகிறது. அதன்பின் வடஇந்திய தலைவர் பேசுகிறார்.

முதல்வர் பேச்சு
பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். தொடர்ந்து வரிசையாக தலைவர்கள் பேசுகிறார்கள். இதை அனைத்தையும் பார்க்க பார்க்க கமல்ஹாசனின் முகம் கோணலாகிறது. அதன்பின் எச்.ராஜா வந்து டீவியில் ''நான் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது.. நீங்கள் ஆன்டி இந்தியன்'' என்கிறார்.

கடும் கோபம்
இதை பார்த்ததும் கோபம் தலைக்கேறிய கமல்ஹாசன் டீவியை ரிமோட்டால் அப்படியே உடைத்து நொறுக்குகிறார். பின் அவர் கேமராவை நோக்கி, முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போட போறீங்க.குடும்ப அரசியல்ன்னு சொல்லி நாட்டையே குழி தோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா.
|
நம் உரிமை
இல்லை நம்மை உரிமைக்காக போராடின போது துரத்தினாங்களே அவங்களுக்கா. இல்லை விவசாயிகளை நடுத்தெருவில் நிற்க வைத்தார்களே அவங்களுக்காக, இல்லை கார்ப்பரேட் கைக்கூலியா மாறி மக்களை சுட்டு கொன்றார்களே அவங்களுக்கா.. யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள்.

வைரல்
சொல்லுங்க.. யாருக்கையா ஓட்டு போட போறீங்க.. ஏப்ரல் 18 குனிஞ்சு கும்பிடாதீங்க.. நிமிர்ந்து ஓட்டு போடுங்க.. மாபெரும் மாற்றத்திற்கு மக்கள் நீதி மய்யம், என்று கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார். கமல்ஹாசனின் இந்த புது விதமான பிரச்சாரம் பெரிய வைரலாகி உள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications