கொரோனாவால் இறந்த நிர்வாகிகள்.. வீரவணக்கம் வீரவணக்கம்.. கமல் ஹாசன் உருக்கமான கவிதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிரவித்து கவிதை வெளியிட்டுள்ளார் கமல் ஹாசன். வீர வணக்கம் என்ற பெயரில் அந்த கவிதையை இப்போது பார்ப்போம்..

kamal haasan pay tribute to MNM Members who died covid 19

"வீரவணக்கம்!

வீரவணக்கம் வீரவணக்கம்
வீழும் இவ்வுடல் என்று உணர்ந்து
விழைந்து ஈகை
செய்தவருக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்!

கொள்ளை நோய்
நமைக்
கொன்று குவிக்கும்
வேளையிலும்
சக மானுட சேவை
கடமை
என்ற
முன் அணிகட்கு
வீரவணக்கம்!
நம்மவருக்கு வீரவணக்கம்!!

உள்ளே இருக்கும் உயிரூட்டங்கள்
அனைவருக்குமே பொருந்தும், எனவே
கொள்ளைநோய்
நமைக் கொல்லும்போதும்
மானுடம் மீண்டிடும்
மந்திரம் சொல்வோம்.

நானெனும்
அகந்தை மறந்த
மனிதர்
நிதமும் பேசும்
உண்மைச் சொல்
அது.

மாயமும் இல்லை! மந்திரமில்லை!!

நம்மை மிஞ்சும்
ஈகையும் அன்பும்!!!

தாயிடம் கற்றது
போதாதென்றால்
வாழ்விடம் கற்பீர்,
வேறேது வழி?

வீரவணக்கம் என்றிடும் கோஷம்,
வீழ்ந்தவருக்கு மட்டும் அன்று....
நாளை
என்றொரு
நாளை நோக்கி
நடக்கும்
நம்மவர் அனைவருக்குமே....

நாளை நமதே " இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+