சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கமல்ஹாசன்!
சென்னை: சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 104 ஆவது பிறந்த நாள் விழாவை அதிமுக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகிறார்கள்.

காலை முதல் வீதியெங்கும் லவுட் ஸ்பீக்கர்களில் எம்ஜிஆரின் தத்துவப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே இருக்கும் எம்ஜிஆர் சிலைகளுக்கு அதிமுகவினரும் பொதுமக்களும் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தனது பிரச்சாரங்களில் எம்ஜிஆரை முன்னிறுத்தி வருகிறார் கமல். இதை அதிமுக கண்டித்து வருகிறது. ஆனால் எம்ஜிஆர் மக்கள் திலகம், அதிமுகவின் திலகம் அல்ல என்றும் அவர் மடியில் உட்கார்ந்து வளர்ந்தவன் என்ற முறையில் தனக்கு எம்ஜிஆரின் பெயரை பயன்படுத்த அனைத்து உரிமைகளும் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து வரும் நிலையில் இன்று எம்ஜிஆரின் சிலைக்கு மரியாதை செய்துள்ளார்.
’பொறு, கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்று காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார். அமெரிக்க சிகிச்சை முடிந்து அதிக ஆற்றலோடு திரும்பி, அவர் அரியணை ஏறிய வரலாற்றைச் சொல்கிறது ‘காலத்தை வென்றவன்’. (1/2) pic.twitter.com/ZJEjCl1A9a
— Kamal Haasan (@ikamalhaasan) January 17, 2021
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறுகையில் பொறு, கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்' என்று காலத்தோடு மோதியவர் என் அண்ணன் எம்ஜியார். அமெரிக்க சிகிச்சை முடிந்து அதிக ஆற்றலோடு திரும்பி, அவர் அரியணை ஏறிய வரலாற்றைச் சொல்கிறது 'காலத்தை வென்றவன்'. அந்தப் படத்தை இங்கே வெளியிடுகிறேன். வாழ்க்கையில் வெல்ல நீங்களும் பார்ப்பீர்கள்.
#நாளை_நமதே என தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications