Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயிச்ச மாநிலத்துக்கு சமமா தமிழகத்தையும் நடத்தியாகணும் மோடி.. கமல் அதிரடி!

தமிழக நலனுக்காக பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்,

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Election Results: நம்பிக்கை தந்த மக்கள்,நெகிழ்ச்சியுடன் கமல் நன்றி!- வீடியோ

    சென்னை: "பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை, தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருத வேண்டும். வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் மோடி கருத வேண்டும். ஒரு தமிழனாக, இந்தியனாக, இந்திய குடிமகனாக இதை நான் பிரதமருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    பாஜக என்றாலே, அதாவது இந்துத்துவா என்றாலே கமலுக்கு ஆகாது. கிளீன் இந்தியாவில் விளம்பர தூதராக சேர்த்ததுகூட மாநிலத்தின் புகழ்மிக்க ஒரு நபர் என்ற முறையில்தான் என்பதை புரிந்து கொள்ளாமல், அறிவிப்புக்கு பிறகு கமலுக்கு நிறைய விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.

    இதற்கு ஒரே காரணம், மாநில அரசு மீது குறையாக சொல்லும் கமல், மத்திய அரசை ஒருமுறை கூட விமர்சித்து கருத்து சொல்லவில்லை என்று பகிரங்கமாக சொல்லப்பட்டது.

    சொம்பு தூக்கி

    சொம்பு தூக்கி

    ஆனால் பாஜகவின் நிழல், பாஜகவின் சொம்பு தூக்கி என்று கமல் மீது செலுத்தப்பட்ட அம்புகள் ஒவ்வொன்றாக கழண்டு விழ ஆரம்பித்தன. சரமாரி குற்றச்சாட்டுகள் பாஜக மீது பதிலுக்கு தொடுத்தார். எச்.ராஜா டென்ஷன் ஆகும் அளவுக்கு விமர்சித்தார்.

    பாஜகவாதியா?

    பாஜகவாதியா?

    கடைசியில் பள்ளப்பட்டி பிரச்சாரத்தில் "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து" என்று கமல் கொளுத்தி போட, அது நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிய... கோர்ட், கேஸ் வரை சென்ற இந்த விவகாரத்தில், மோடியே உள்ளே நுழைந்து, "எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது" கமலுக்கு பதில் சொல்ல.. என்று விவகாரம் பெரிதானது. இப்போது பாஜகவின் நேர் எதிரி என்ற பெயரை சுமந்துள்ளார் கமல். தான் ஒரு பாஜகவாதி அல்ல என்பதை பழிசொன்ன மக்களுக்கு நிரூபிக்க இத்தனை நாள் ஆகி உள்ளது!

    தமிழன்

    தமிழன்

    இந்நிலையில் மேலும் பாஜக மீது அம்பு தொடுத்துள்ளார் கமல். செய்தியாளர்களிடம் இன்று பேசியபோதுகூட, மத்திய அரசின் திட்டத்துக்கு தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தார். கூடவே மோடிக்கு ஒரு கோரிக்கையையும் முன் வைத்துள்ளதை எந்த தமிழனாலும் புறந்தள்ளவே முடியாது. கமல் பேசியதாவது:

    விவசாய நிலங்கள்

    விவசாய நிலங்கள்

    ஹைட்ரோ கார்பன் திட்டமே வேண்டாம் என்று மக்கள் நீதி மய்யம் சொல்லாது. மக்கள் வசிக்கும் பகுதிகள், விவசாய நிலங்களில் அதை எடுக்கக் கூடாது என்பதே எங்களது கருத்து. விவசாய நிலங்களை அழித்து செய்யப்படும் எந்தக் காரியத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.

    பிரதமருக்கு கோரிக்கை

    பிரதமருக்கு கோரிக்கை

    தமிழகத்தை எழுச்சி மிகு மாநிலமாக்குவதே எங்களது இலக்கு. இடையில் வந்து போகும் தேர்தல்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை, தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருத வேண்டும். வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தையும் மோடி கருத வேண்டும். ஒரு தமிழனாக, இந்தியனாக, இந்தியக் குடிமகனாக இதை நான் பிரதமருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்" என்றார்.

    மாற்று சக்தி

    மாற்று சக்தி

    அநேகமாக கமலின் கோரிக்கையைதான், திமுக, நாம் தமிழர், மதிமுக, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதில் அதிமுக நிலைப்பாடு உறுதியாக தெரியவில்லை என்றாலும் கமலின் இந்த கோரிக்கையை தவறு என்று சொல்ல யாருக்குமே தைரியம் வராது. இனி கமல் ஒரு மாற்று சக்தியாக உருவாக ஆரம்பித்துள்ளது அவர் முன்வைத்துள்ள கோரிக்கையில் இருந்தே புலப்பட ஆரம்பித்துள்ளது. பேசாமல், கமலும் லோக்சபாவுக்குப் போயிருக்கலாம்.. செமையாக இருந்திருக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+