Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவை அப்படி பேசிட்டு.. இப்போ ஏன் இப்படி பல்டி? டக்கென கேட்ட செய்தியாளர்.. கமல் கொடுத்த பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டு, இப்போது திமுக மூலம் மாநிலங்களவைக்குள் நுழைவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வைக்கப்படும் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசினார்.

Kamal Haasan Responds to Criticism Over Joining Rajya Sabha via DMK After Earlier Remarks

கமல் பேட்டி

கமல்ஹாசன் பேசுகையில், "முதல்வர் அழைப்புவிடுத்ததன் பேரில் சந்தித்தோம். மாநிலங்களவையில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு எங்கள் கட்சியிடம் சொல்லியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளையும், தஸ்தாவேஜுகளையும் தயார் செய்து வைக்கவேண்டும் என்பதற்கான அறிவுரைகளை, முன் அனுபவம் உள்ளவர்கள் எங்களுக்கு சொன்னார்கள். என் குரல் அந்த அவையில் தமிழ்நாட்டிற்காக பேசவிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிற்காக நான் எப்போதுமே பேசிக் கொண்டிருக்கிறேன்' என்றார்.

திமுகவை விமர்சித்துவிட்டு இப்போது..

அப்போது செய்தியாளர் ஒருவர், "மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய காலகட்டத்தில் குடும்ப அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தை குழி தோண்டி புதைக்கிறது திமுக என்று எதிர்ப்பு அரசியல் செய்தீர்கள். இன்றைக்கு உறவு என்று வந்திருக்கிறீர்களே" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல்ஹாசன், வேண்டாம் என தலையை ஆட்டியபடி நடக்க ஆரம்பித்தார். பிறகு என்ன நினைத்தாரோ திரும்பவும் மைக் முன்பாக வந்து நின்று, "நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணிக்கு வந்துள்ளேன்." என முகத்தை கடுமையாக வைத்தபடி பதில் அளித்தார். அப்போது உடன் இருந்த நிர்வாகிகள், ஜனநாயகத்திற்காக கமல் கைகோர்த்துள்ளார் என்று மைக்கில் பேசியபடி கிளம்பினர்.

மக்கள் நீதி மய்யம்

மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி அரசியல் பிரவேசம் செய்தார் கமல்ஹாசன். இடதும் இல்லை வலதும் இல்லை மய்ய அரசியல் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். கட்சி ஆரம்பித்த சமயத்தில் பிரபலங்கள் பலர் அவரது கட்சியில் சேர்ந்தனர். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அடிக்கடி ஆலோசனை என அதிரடி காட்டினார்.

முதல் தேர்தலில்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முறையாக தேர்தல் களம் கண்ட மநீம ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாக்குகளைப் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 3.72% வாக்குகளைப் பெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்திருந்தாலும், பல நகர்ப்புற தொகுதிகளில் நாதக, அமமுகவை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

கமல் தோல்வி

2021 சட்டமன்றத் தேர்தலில் 182 இடங்களில் போட்டியிட்ட மநீம 2.62 சதவீத வாக்குகளைப் பெற்றது. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.

அத்தனை இடங்களிலும் தோல்வி அடைந்ததன் காரணமாக கட்சியினர் சோர்வடைந்தனர். கமல்ஹாசனும் படங்களில் நடிப்பதில் பிஸி ஆனதால் பலர் கட்சியை விட்டு விலகினர். இதையடுத்து கமல்ஹாசனும் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தாமல் சினிமாவில் தீவிரம் காட்டினார். 'விக்ரம்’ படத்தின் போது உதயநிதி ஸ்டாலின் உடன் நெருக்கம் காட்டினார் கமல்.

திமுகவுடன் இணக்கம்

அதைத்தொடர்ந்து, திமுக உடன் இணக்கம் காட்டத் தொடங்கினார் கமல்ஹாசன். ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையின் போது அவரை சந்தித்து பேசினார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போதே திமுக - காங்கிரஸ் அணியில் கமல் இணைவது உறுதியானது.

2024 மக்களவைத் தேர்தல் வந்த போது பத்து தொகுதிகளில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார். அதற்கு ஈடாக மாநிலங்களவை தேர்தலில் கமலஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தது. இந்த அடிப்படையில் தற்போது ஜூன் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நான்கில் ஒரு சீட்டை கமல்ஹாசனுக்கு கொடுத்துள்ளது. இதன் மூலம் ராஜ்யசபாவுக்குள் அடியெடுத்து வைக்கிறார் கமல்ஹாசன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+