ஜனநாயகன் ஓடாது.. ’கன்னட கம்பெனி’ கேவிஎன் புரொடக்சன்! தக் லைஃப்-க்கு தடா.. சிக்கலில் சிக்கிய விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னட மொழி குறித்து கமலஹாசன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடப்படாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபையினர் கூறியுள்ளனர். கமலஹாசன் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதிகள் வற்புறுத்துவது போல பேசி உள்ளனர். இந்த நிலையில் கமலஹாசனின் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை என்றால் பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கும் ஜனநாயகன் படம் தமிழகத்தில் வெளியாகாது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என இந்தியா முழுவதும் இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்துக்கான பிரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமலஹாசன் தமிழில் இருந்து உருவானது கன்னடம் என பேசி இருந்தார். இதற்கிடையே கமலஹாசன் கன்னட மொழியையும் கன்னட மொழி பேசும் மக்களையும் இழிவு படுத்தி உள்ளதாக கூறி கர்நாடகாவில் போராட்டம் வெடித்திருக்கிறது.

Kamal Haasan Karnataka Vijay

கன்னட ரக்‌ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் மட்டுமல்லாது காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்துள்ளன. படத்தை வெளியிட முடியாதென கன்னட திரைப்பட வர்த்தக சபையும் கூறி உள்ளது. இந்த நிலையில் படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கமலஹாசன் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக கமலஹாசன் மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ பார்க்க வேண்டியிருக்கிறது?, எந்த அடிப்படையில் அவர் பேசினார்? அவர் வரலாற்று ஆய்வாளரா? மொழியியல் வல்லுனரா? என பல கேள்விகளை முன் வைத்தனர்.

இந்த நிலையில் படத்தின் வெளியிட்டை தள்ளி வைப்பதாக கமல் தரப்பு கூறி இருக்கும் நிலையில் வழக்கின் மீதான விசாரணை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கமலஹாசனுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பேசி வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கமலுக்கு ஆதரவாக முதன் முதலில் அறிக்கை விட்டிருந்தார். இந்த நிலையில் விவகாரம் தொடர்பாக விஜயின் ஜனநாயகம் படத்திற்கு சிக்கல் முளைத்திருக்கிறது. அரசியலில் இறங்கி இருக்கும் விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார். குறிப்பாக இந்த படத்தை பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே பல படங்களை அந்த நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் விஜய் படத்தை இந்த நிறுவனம் தயாரித்தது. தற்போது தக் லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் தயாரிக்கும் ஜனநாயகன் படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் எனவும், கமலுக்கு ஆதரவாக விஜய் குரல் கொடுக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்களும் பகிரப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க கமலை அச்சுறுத்துவது ஒட்டுமொத்த தமிழகத்தை அச்சுறுத்துவதாகும் எனவும், பணமா? இனமா? என்றால் இனம் தான் முக்கியம் என சீமான் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+