thug life collection: RETRO கிட்டயே வராத THUG LIFE! அஜித் தான் மாஸ்! சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள தக் லைப் திரைப்படம் நேற்று வெளியானது. சுமார் 3000 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான அந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தின் முதல் நாள் வசூலை கூட தக் லைப் திரைப்படம் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி, விடாமுயற்சி படத்தின் வசூல் இதைவிட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். தமிழ் மட்டுமல்லாது பாலிவுட் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல நடிப்பு பல்கலைக்கழகம் என்றால் தற்போதைக்கு கமலஹாசன் தான். இருவரும் இணைந்த நாயகன் திரைப்படம் இன்று வரை இளம் இயக்குனர்களுக்கு ஒரு பாட புத்தகம் போலவே என்பார்கள்.
அந்த வகையில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்தில் இந்த கூட்டணி இணையும் என்ற அறிவிப்பே பலரது எதிர்பார்ப்பை எதிர் செய்தது. கூடுதலாக சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் தக் லைப் படத்தில் இணைகிறார்கள் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படத்துக்கு இசையமைப்பாளராக ஏஆர் ரகுமானும் இணைந்தார். அவரது இசையமைப்பில் வெளியான பாடல்களும், ட்ரெய்லர், டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடலும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. இந்த நிலையில் கர்நாடகா தவிர்த்து உலகம் முழுவதும் நேற்று தக் லைப் திரைப்படம் வெளியானது. 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படம் வெளியான நிலையில் படம் எதிர்மறை விமர்சனங்களையே பெற்று வருகிறது.
நாயகன் படம் எடுப்பதாக சொல்லி செக்கச் சிவந்த வானம்-2 படத்தை எடுத்து வைத்திருப்பதாக புலம்புகின்றனர் ரசிகர்கள். இதுவரை சமூக வலைதளங்களில் ஒரு விமர்சனம் கூட தக் லைப் படத்திற்கு ஆதரவாக இல்லை. அந்த அளவுக்கு படத்தை அடித்து துவைத்து எடுத்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறுத்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெறும் 17 கோடி மட்டுமே முதல் நாளில் ஈட்டி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்திற்காக கமலஹாசன், மணிரத்தினம், சிம்பு, திரிஷா, அபிராமி என இந்தியா முழுவதும் பறந்து பறந்து பிரமோஷன் செய்தனர். ஆனாலும் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை. வார இறுதி நாட்கள் இருந்தாலும் படத்துக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனம் வசூலை வெகுவாக பாதிக்கும் என்கின்றனர்.
இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் முதல் நாள் வசூலை கூட தக் லைப் திரைப்படம் தாண்டவில்லை. அந்தப் படம் முதல் நாளில் இந்தியாவில் 19 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் தக் லைஃப் திரைப்படம் வெறும் 17 கோடி மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பெரிய நடிகர்களின் படம் இந்த ஆண்டு வெளியானது என்றால் அது அஜித் படம் மட்டும் தான். விடாமுயற்சியும், குட் பேட் அக்லி திரைப்படமும் இந்த ஆண்டு வெளியானது. அதில் குட் பேட் அக்லி சுமார் 29 கோடியையும் விடாமுயற்சி திரைப்படம் 27 கோடி ரூபாயையும் முதல் நாளில் வசூலித்து இருந்தது. ஆனால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கமலும் சிம்புவும் இணைந்த தக் லைப் திரைப்படம் வெறும் 17 கோடியை மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications