பத்தல பத்தல பாடலில் வரும் "ஒன்றியம்" என்றால் என்ன? கமல் விளக்கத்தை கேட்டு தலைசுற்றிப்போன நிருபர்கள்
சென்னை: விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடலில் வந்த வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழில் ஒன்றியம் என்பதற்கு பல அர்த்தங்கள் இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது விக்ரம் படம். இந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் டிராக் வெளியானது. இதில் ஒன்றியத்தின் தப்பால ஒன்னுமில்ல இப்பாலே என வரிகள் இடம்பெற்றுள்ளது.
அது போல் சாவி இப்போ திருடன் கையிலே என்ற வரியும் உள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

4ஆண்டுகள்
அவர் கூறுகையில் கடந்த 4 ஆண்டுகளாக எனது நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 4 ஆண்டுகள் காத்திருக்க வைத்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பத்தல பத்தல பாடலில் அரசியல் நெடி இருப்பதாக நிறைய பேர் சர்ச்சையை கிளப்புகிறார்கள். ஆனால் தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன.

ஒன்றியம்
ஒன்றியம் என்ற வார்த்தைக்கு பதில் பல வார்த்தைகள் உள்ளது. பத்திரிகையாளர் இணைந்துள்ள இந்தக் கூட்டம் ஒன்றியம்தான். இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வைத்துள்ள சங்கம் கூட ஒரு ஒன்றியம்தான். படம் வெளிவந்த பிறகு இதற்கான அர்த்தங்கள் தெரியும் என்றார்.

ஜூன் 3 இல் விக்ரம்
இதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-இல் விக்ரம் படம் வெளியாவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இது திட்டமிட்டு நடக்கவில்லை. தற்செயலாக நடந்தது. எதேச்சையாக நடந்ததில் எனக்கு சந்தோஷம்தான் என்று விளக்கினார்.

இசை வெளியீட்டு விழா
முன்னதாக இந்த பாடலின் இசை வெளியீட்டு விழா கடந்த 15ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் போட்டியாளர்களாக இருந்தாலும் தானும் முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல நண்பர்கள், அரசியல் வேறு நட்பு வேறு என்று கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications