20 தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்: கமல்ஹாசன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இடைத்தேர்தலில் கமல் தனித்து நின்றால் என்ன ஆகும் ? - வாசகர்கள் கருத்து

    சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் போட்டியிட உள்ளது என்று, கமல்ஹாசன் தெரிவித்தார்.

    கமல்ஹாசன் தனது பிறந்த நாளையொட்டி, கட்சி நிர்வாகிகளுடன் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

    கமல்ஹாசன் கூறியது இதுதான்: அரசியல் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் மக்கள் நீதி மய்யம் உள்ளது. எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்குமே எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    [குறுகிய காலம்.. அழுத்தமான முத்திரை.. மய்யம் நாயகன் கமல் பெருமையாக கொண்டாடலாம் பிறந்த நாளை!]

    களப்பணியாளர்கள்

    களப்பணியாளர்கள்

    கேள்வி: 20 தொகுதிகளில் இடைத் தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளீர்கள். களப் பணியாளர்கள் நியமனம் முடிந்துவிட்டதா?

    பதில்: களப்பணியாளர்கள் 80 சதவீதம் பேர் தயாராக உள்ளனர். தேர்தலை எதிர்கொள்ளும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எங்கள் தேர்தல் முறையும், நேர்காணல் முறையும், திருத்தமாகவும், ஆழமாகவும் இருக்கும் என்பதால், இவ்வளவு தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இடைத் தேர்தல் எப்படி

    இடைத் தேர்தல் எப்படி

    கேள்வி: 20 தொகுதி இடைத் தேர்தலில் எதை முன்னிறுத்துவீர்கள்?

    பதில்: நாங்கள் கட்சி ஆரம்பித்த நோக்கமே, சுகாதாரமான அரசியல். ஊழலற்ற அரசியல் தேவைக்காகத்தான். இதை கொண்டுவரும்பட்சத்தில், ஒவ்வொரு துறையும் சீரமையும் என்று நம்பலாம். தேர்தல் முறைகேடுகளை மாற்றி, தேர்தலை முறையாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மக்கள் நீதி மய்யம் எடுத்து வருகிறது. எங்கள் பணிகளின் வெற்றியை, மக்கள் கண்களில் பார்க்கிறேன். வாக்குறுதிகளை மக்களிடமிருந்தே கேட்டு பெறுகிறேன்.

    தகவலாகத்தான் பார்க்கிறேன்

    தகவலாகத்தான் பார்க்கிறேன்

    கேள்வி: திராவிட கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள். ஆனால், திராவிட கட்சிகளுடன்தான் கூட்டணி வைக்கப்போவதாக தகவல் வருகிறதே. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: தகவலாகத்தான் பார்க்கிறேன். எனக்கே தகவலாகத்தான் இருக்கிறது. நான் யாருடைய ஊதுகுழலும் இல்லை. மக்களுக்கான கருவி.

    பாஜக வெற்றி வாய்ப்பு

    பாஜக வெற்றி வாய்ப்பு

    கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி வாய்ப்பு எப்படி?

    பதில்: அதை இப்போதே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த ஜோசியமும் எனக்கு வராது. மக்கள் நல்ல தீர்ப்பை தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    இலங்கை நிலவரம்

    இலங்கை நிலவரம்

    கேள்வி: இலங்கை அரசியல் நிகழ்வுகள் எப்படி? ராஜபக்சே பிரதமராக நீடித்தால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

    பதில்: நமது நாட்டு அரசியலே சரியில்லை என்று சொல்லும்போது, அடுத்த நாட்டு பிரச்சினை குறித்து குற்றம்சாட்டிக்கொண்டிருக்க முடியாது. ஆனால் எந்த நாடாக இருந்தாலும் மக்கள் ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள். மக்களாட்சி நிலைநிறுத்தப்படும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+