நாங்க 4000 கொடுப்பதா இருந்தோம்.. அதில் ஆயிரத்தை உருவி திமுக காப்பி.. கமல் பொளேர்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளதாக குற்றம்சாட்டிய நிலையில் திமுகவால் காப்பி மட்டுமே அடிக்க முடியும். நாங்கள்தான் அந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு உதவித் தொகை கொடுப்போம் என கமல்ஹாசன் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். இது மிகப் பெரிய அறிவிப்பாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் திருச்சி சிறுகனூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை அறிவித்திருந்தார்.

அன்றாட தேவை
அப்போது அவர் கூறுகையில் ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கு ஏழை எளிய மக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. குழந்தைகளின் அன்றாட தேவையையாவது பூர்த்தி செய்ய இது உதவும் என்கிறார்கள் பெண்கள்.

பெண்கள் தின விழா
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று பெண்கள் தின விழா நடைபெற்றது. அதில் மக்கள் நீதி மய்யம் அறிவித்த திட்டங்களை திமுக காப்பி அடித்துள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 4000 கொடுக்கும் திட்டம் வைத்திருந்தோம்.

காப்பி அடிப்பது
நாங்கள் நினைத்த 4000-த்தில் 3 ஆயிரத்தை விட்டுவிட்டு ரூ 1000 மட்டும் உருவி கொடுப்போம் என்கிறார்கள். காப்பி அடிப்பது யாராக இருந்தாலும், முதலில் கூறியது நாங்கள்தான். உங்களால் காப்பி மட்டும்தான் அடிக்க முடியும். நாங்கள் செயல்படுத்துவோம். என்னிடம் உள்ள நல்லதை காப்பி அடிப்பதிலும் நல்லத்தனம் வேண்டும்.

காப்பி
பெண்களின் நலன் பற்றிய நிறைய திட்டங்கள் உள்ளன. அதனை அறிவித்தால் கூட காப்பி அடிப்பார்கள் போல, தனித்து வாழும் தாய்மார்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும். எந்த பணியை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும். புலியை அடித்து துரத்திய வரலாறு கொண்ட பெண்கள் ஓட்டுக்கு பணம் தருவோரையும் அடித்து துரத்த வேண்டும். முறைகேடு செய்யாத நல்ல அரசு அமைந்தால் தமிழகத்தை சிங்கப்பூர் போல் மாற்றிடலாம் என்றார் கமல்ஹாசன்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications