என்னை ஆதரித்து ரஜினி பிரசாரம் செய்தால் சந்தோஷம்தான்.. கமல்ஹாசன்

Subscribe to Oneindia Tamil

ஆலந்தூர்: என்னை ஆதரித்து ரஜினி பிரசாரம் செய்தால் சந்தோஷம்தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது.

மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தும் வாய்ப்பு கிடைக்கிறது. எங்களுடைய மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுடன் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். தேர்தல் பறக்கும் படையினர் பணம் பிடிபடும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

தேர்தல் ஆணையத்தில்

தேர்தல் ஆணையத்தில்

இதை பார்க்கும் எங்கள் வேட்பாளர்களும் நாமும் இப்படி செலவு செய்ய வேண்டும் என அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு கனிவாக சொல்லுகிறேன். இதை செய்யக் கூடாது. அப்படி என் கட்சியினர் யாராவது செய்தால் அவர்களை தேர்தல் ஆணையத்தில் நானே காட்டி கொடுப்பேன்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

நல்ல திட்டங்கள் எங்கு இருந்தாலும், யார் செய்திருந்தாலும் அதை மீண்டும் மேம்படுத்தி மக்களுக்கு தர மக்கள் நீதி மய்யம் முயற்சி செய்யும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளில் தான் தேர்தல் ஆணையம், பறக்கும் படை, வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல் படக்கூடாது.

பிரசாரம்

பிரசாரம்

சே‌ஷன் மாதிரி இருந்தவர்கள் இயக்கிய தேர்தல் ஆணையர், இன்னும் அழுத்தமாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். ரஜினி என்னிடத்தில் பேசும்போது எனக்கு ஆதரவு தருவதாக சொன்னார். எனக்கு ஆதரவு தரக்கோரி திருப்பி திருப்பி அவரிடம் வலியுறுத்த முடியாது. எனக்கு ஆதரவாக ரஜினி பிரசாரம் செய்வாரா என்று தெரியாது. பிரச்சாரம் செய்தால் சந்தோ‌ஷம்தான்.

ரத்து

ரத்து

வேலூரில் திமுக பிரமுகர் குடோனில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த இடத்தில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். அழுக்கு அழுக்குதான் என்றார் கமல்ஹாசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+