2 வாரம்தாங்க.. வீட்டுலயே இருங்க.. ஸ்கூல் ஃபீஸ், வாடகை, ஈஎம்ஐ கட்ட உங்க உடல்நலம் முக்கியம்.. கமல்
சென்னை: இன்னும் 2 வாரம்தான் வீட்டுக்குள்ளேயே இருங்கள். பள்ளிக் கட்டணம், வாடகை, ஈஎம்ஐ கட்ட உங்கள் உடல்நலம் முக்கியம் என கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் தற்போது கொரோனா பாதிப்பில் 4ஆவது வாரத்தில் உள்ளதால் இனி வரும் 2 வாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசன் இன்னொரு வீடியோவில் கூறுகையில் என்ன இது வீட்ல இருக்க சொல்கிறீர்கள், வருமானத்திற்கு என்ன செய்வது? மார்ச், ஏப்ரல் மாதத்தில் குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணுமே! ஆண்டு கட்டணம் வேற இருக்கு என ஏகப்பட்ட குழப்பங்கள். நாளைக்கு வருமானம் வருமா? கடையெல்லாம் அடைச்சிடுமேனு நிறைய கேள்விகள் எழும்.

கொஞ்சம்
இவையெல்லாமும் செய்ய நீங்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டியது ரொம்ப அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதனால்தான் இந்த 2 வாரமும் முக்கியமானது. வேலை என்னவாகும், பசங்க படிப்பு என்னவாகும், தொழில் என்னவாகும் என்ற உங்களின் நியாயமான பயங்களை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள்.

குழந்தைகள்
இந்த 2 வாரத்தை எப்படி சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை பாருங்க. அதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. வேலை, தொழில்னு எப்போதும் ஓடிகிட்டு இருந்திருந்தீர்கள் என்றால் இந்த 2 வாரம் உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். இத்தனை வருஷங்கள் நீங்கள் தெரிந்துகிட்ட விஷயங்களை உங்கள் குழந்தைகள் கிட்ட சொல்லுங்கள்.

என்ன செய்யலாம்
நீங்கள் படிக்க வேண்டும் என நினைத்து படிக்க முடியாமல் போன அந்த புத்தகம், நீங்கள் பார்க்க வேண்டும் என நினைத்து பார்க்க முடியாமல் போன படம், கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்து கற்றுக் கொள்ள முடியாமல் போன இசை. டைம் இல்லை என தள்ளிபோட்ட அந்த போன் அழைப்புகள் ஆகியவற்றை இப்போது செய்யுங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 21, 2020 |
காலத்தின் கட்டாயம்
வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளை ஆன்லைன் கோர்ஸ்களில் சேர்த்து விடுங்கள். புது விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்ளட்டும். அவசர கால சமையல் என்பதை இப்போது சொல்லிக் கொடுங்கள். எந்திரமா ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் காலத்தின் கட்டாயத்தால ஒரு சின்ன இடைவேளை இப்போது கிடைத்திருக்கிறது. இதை சரியா பயன்படுத்துங்கள், வீட்டுலயே இருங்கள், பத்திரமாக இருங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு படித்ததை வழக்கத்திற்கு கொண்டு வரும் நேரம் இது என தெரிவித்துள்ளார் கமல்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications